முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தீவிர அரசியலுக்கு வரவேண்டும் என அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் வலியுறுத்தி வருகின்றனர். இதையொட்டி தினமும் சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு நூற்றுக்கணக்கானோர் திரண்டு சென்றனர்.
அப்போது, “நேரம் வரும்போது, நல்ல முடிவை நான் அறிவிப்பேன்” என தீபா கூறி வந்தார். இதையடுத்து, இளம் புரட்சித்தலைவி தீபா பேரவை, தமிழகம் முழுவதும தொடங்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவி தினத்தில், தனது முடிவை அறிவிப்பதாக தீபா அறிவித்தார். இதை தொடர்ந்து, இன்று அதிகாலை முதல் சென்னை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள், சென்னை தி.நகரில் உள்ள தீபா வீட்டின் முன் திரண்டுள்ளனர். அனைத்து பத்திரிகையாளர்களும் அங்கு குவிந்துள்ளனர்.

முன்னதாக தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்துக்கு சென்று, அவரது சிலைக்கு, தீபா ஆதரவாளர்கள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
