deepa husband mathavan is escaped

மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மாம்பலம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள பிரபாகரன் வீடியோ ஒன்றையும் போலீசிடம் கொடுத்துள்ளார்.

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பேரவை ஒன்றை தொடங்கி படாத பாடுபட்டு வருகிறார். அவரது பேரவைக்குள் பல்வேறு உச்சகட்ட குழப்பங்கள் நிலவி வருகின்றனர். 

அடிக்கடி அவருக்கும் அவரது கணவர் மாதவனுக்கும் பிரச்சனைகள் வந்த வண்ணம் உள்ளன. இதைதொடர்ந்து மாதவனுக்காக டிரைவராக இருந்த ராஜா பேரவையை விட்டு தூக்கினார் தீபா. பின்னர் தற்போது மீண்டும் சேர்த்துள்ளார். 

ராஜா எண்ட்ரிக்கு பிறகு மீண்டும் கலகம் ஆரம்பித்துள்ளாது. அதாவது பிப்ரவரி 10ம் தேதி திநகரில் ஜெயலலிதா தீபா வீட்டில் சோதனை நடத்த வந்த போலி வருமான வரி அதிகாரி போலீஸை பார்த்ததும் தலை தெறிக்க தப்பியோடினார்.

அவரின் புகைப்படத்தை வைத்து கொண்டு போலீசார் அவரை தேடி வந்தனர். இதுகுறித்து தீபா கணவர் மாதவனிடம் கேட்டபோது, காலையில ஐந்தரை மணியிலிருந்து வீட்டு வாசல்ல அந்த நபர் நிற்கிறதா செக்யூரிட்டி சொன்னார். பட் நான் ஏழு மணிக்குதான் அவரை பார்த்தேன்.அடையாள அட்டையெல்லாம் காண்பிச்சார். மித்தேஸ்குமார் அப்படின்னு அதுல பெயர் இருந்துச்சு. இதையெல்லாம் செக் பண்ணிட்டுதான் உள்ளே வரச்சொன்னேன்.இந்த நேரத்துல எங்க அட்வோகேட்டையும் வரச்சொன்னேன். வந்து விசாரிச்ச அட்வோகேட்டுக்கு டவுட் வந்துடுச்சு. அதனாலதான் அவரு போலீஸுக்கு போன் பண்ணினார். போலீஸும் வந்து அவரை விசாரிச்சுட்டு இருக்கிறப்ப திடீர்னு ஒரு சத்தம்! தப்பிச்சு ஓட ஆரம்பிச்சுட்டார்.இந்த சம்பவத்தை அதிர்ச்சிகரமாதான் பார்க்கிறேன் என தெரிவித்தார். 

இந்நிலையில், போலீ அதிகாரி போலீசில் சரணடைந்தார். அப்போது பகீர் வாக்குமூலத்தை வெளியிட்டார். அதாவது, சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி வருமான வரி அதிகாரி போல் மாதவன் நடிக்க சொன்னதாகவும் போலீசாரை பார்த்ததும் தீபா கணவர் மாதவன் என்னை தப்பியோடச் சொன்னதாகவும் தெரிவித்தார். 

மேலும் மாம்பலம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள பிரபாகரன் வீடியோ ஒன்றையும் போலீசிடம் கொடுத்துள்ளார்.