வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை செயலாளர் ஜெ தீபா அதிரடியாக அறிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் இந்த சமயத்தில் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்து விட்டது. மக்கள் நீதி மய்யம் தனித்து தினகரன் கட்சி தனித்து போட்டி விடுவதாக தெரிவித்து உள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளருமான தீபா தன்னுடைய தேர்தல் நிலைப்பாடு பற்றி தெரிவித்து உள்ளார்.

அப்போது தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அனைத்து தொகுதியிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் அதிமுகவுடன் கூட்டணி வைக்க இருந்ததாகவும் ஆனால் தற்போது அதிமுக தலைமையிலான கூட்டணி முடிவு செய்யப்பட்டு விட்டதால், தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூட்டணி குறித்த உடன்பாடு ஏற்படாத காரணத்தால் தான் தனித்து போட்டியிட உள்ளதாகவும் தீபா தெரிவித்துள்ளார். ஆர அமர்ந்து எல்லாம் முடிந்தபின் ஜெ தீபா அறிவித்திருக்கும் இந்த திடீர் அறிவிப்பால் அரசியல் வட்டாரத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.