தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். கும்பகோணம் அருகே சுந்தரப்பெருமாள்கோவிலில் கஸ்தூரி மூப்பனாரின் இறுதி சடங்குகள் நாளை மாலை நடக்கிறது. 

தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனடும், காங்கிரஸ் கட்சி தலைவருமான மறைந்த ஜி.கே.மூப்பனார் மனைவி கஸ்தூரி. முதுமை காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று சென்னையில் காலமானார். 

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய அளவில் டாப் தலைவராக வளம் வந்த மூப்பனார் இளம் வயதில் இருந்தே சென்னை ஆழ்வார்பேட்டை வீடு, டெல்லி வெஸ்டர்ன் கோர்ட் மற்றும் கட்சி பணிகள் என வாழ்ந்தார். குடும்ப பணிகள் தேவை ஏற்பட்டால் மட்டுமே சொந்த ஊருக்கு சென்று தங்குவது மூப்பனாரின் வழக்கமாக இருந்தது. அந்த வருடத்தின் சில நாட்கள் மட்டுமே மனைவியிடம் பேசுவாராம்.

பல ஏக்கர்களுக்கு அதிபதியான கஸ்தூரி அம்மாளுக்கு ஜி.கே.வாசன் ஒரே மகன் ஆவார். இலங்கையை தவிர எந்த வெளிநாட்டுக்கும் செல்லாத மிகப்பெரிய தலைவர் மூப்பனார் ஆவார். ஏனென்றால் மூப்பனாருக்கு பாஸ்போர்ட் கிடையாது என்பது பல பேருக்கு தெரியாது. எப்படி வெளிநாடுகளில் செல்வதில் மோகம் இல்லையோ அதே போன்று தனது மனைவியையும் பொது நிகழ்ச்சிக்கு அல்லது சுபகாரியங்களுக்கோ மூப்பனாரை ஜோடியாக பார்த்ததே கிடையாது. 

பெரும் நிலச்சுவான்தாரான கோவிந்தசாமியின் மூப்பனாரின் மகன் கருப்பையா மூப்பானார். அவரது மகன் தான் கோவிந்த வாசன் என்கிற ஜி.கே.வாசன். மூப்பனாருக்கு ரங்கசாமி மூப்பனார், சம்பத் மூப்பனார், சுரேஷ் மூப்பனார் என மூன்று சகோதரர்கள் உண்டு. இதில், ரங்கசாமி மூப்பனார் கடந்த மாதம் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.