தி.மு.க.,வுக்கு ஏற்பட்ட தோல்விக்கு, அங்கே பல ஆண்டுகளாக பணியில் இருந்த, அ.தி.மு.க., ஆதரவு போலீஸ் அதிகாரிகளும் காரணம் என ஆளுங்கட்சி தலைமைக்கு அறிக்கை கொடுத்து இருக்கிறார். 

கொங்கு மண்டலத்திலேயே சுத்தி சுத்தி வந்த அதிகாரிகளை பந்தாடி வருகிறார்கள். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.,யாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமித்தார்கள். கொங்கு மண்டலத்தில் தி.மு.க.,வுக்கு ஏற்பட்ட தோல்விக்கு, அங்கே பல ஆண்டுகளாக பணியில் இருந்த, அ.தி.மு.க., ஆதரவு போலீஸ் அதிகாரிகளும் காரணம் என ஆளுங்கட்சி தலைமைக்கு அறிக்கை கொடுத்து இருக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனால், எல்லோரையும் மாற்றும்படி அவருக்கு தலைமை உத்தரவு போட்டது. இதன்படி, போன மே மாதம் துவங்கி இப்போது வரைக்கும், 54 டி.எஸ்.பி.,க்கள், 94 இன்ஸ்பெக்டர்களை, தென், மத்திய மண்டலங்களுக்கு துாக்கி அடித்து விட்டார்கள். இவர்கள் எல்லாம், 15 - 20 ஆண்டுகளாக கொங்கு மண்டல மாவட்டங்களிலேயே வலம் வந்தவர்கள். இன்னும் 40 இன்ஸ்பெக்டர்கள், 32 டி.எஸ்.பி.,க்களை துாக்கியடிக்க, பட்டியல் தயாராகிக் கொண்டு இருப்பதாக சொல்கிறார்கள்.