Asianet News TamilAsianet News Tamil

அடடே இப்படியொரு போராட்டமா..? ஸ்தம்பித்தது போக்குவரத்து... இனிமேலாவது விடிவு கிடைக்குமா..?

விவசாய சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்தால் டெல்லியே மூழ்கி கிடக்கிறது.
 

Damn such a struggle ..? Traffic came to a standstill ... Will there be any relief?
Author
Tamil Nadu, First Published Sep 27, 2021, 11:27 AM IST

விவசாய சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்தால் டெல்லியே மூழ்கி கிடக்கிறது.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதியிலிருந்து இந்திய தலைநகர் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ரயில் மறியல், சாலை மறியல், உண்ணாவிரத போராட்டம், டிராக்டர் பேரணி உள்ளிட்ட பல்வேறு விதமான போராட்டங்கள் நடத்தியும் விவசாயிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு இப்போது வரை கண்டுகொள்ளவில்லை. Damn such a struggle ..? Traffic came to a standstill ... Will there be any relief?

இந்த நிலையில், இன்று ஒருநாள் அடையாள பாரத் பந்த்திற்கு 40 சங்க பிரதிநிதிகள் அழைப்பு விடுத்திருந்தனர். நாடு தழுவிய வேலை நிறுத்தம் காலை 6 மணி முதல்  தொடங்கியது . அரியானா, உத்திரப்பிரதேசம், பஞ்சாப், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு முக்கிய எதிர்கட்சிகளான காங்கிரஸ், திராவிட முன்னேற்ற கழகம், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து கொண்டிருக்கின்றன.Damn such a struggle ..? Traffic came to a standstill ... Will there be any relief?

 டெல்லியை சுற்றியுள்ள சிங்கூ, காசிப்பூர் உள்ளிட்ட எல்லை பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் இருந்து அரியானா வழியாக ராஜஸ்தான் மாநிலம் செல்லும் முக்கிய பகுதியாக உள்ள குருகுராமில் ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். சாலைமறியல் போராட்டம் என்பது 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. மறியல் காரணமாக பல கி.மீ. தூரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. விவசாயிகள் அனைத்து வழிகளையும் மறித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் குருகிராம், நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios