Asianet News TamilAsianet News Tamil

கனியமூர் பள்ளிக்கூட கலவரத்தில் சாதியின் பெயரால் தலித்துகள் கைது.. திருமாவளவன் கொந்தளிப்பு.

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கணியமூர் பள்ளி வன்முறையில் தொடர்பு இல்லாதவர்களை விடுவிக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

Dalits arrested in the name of caste in Kaniyamur school riots.. Thirumavalavan angry.
Author
Chennai, First Published Aug 10, 2022, 8:11 PM IST

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கணியமூர் பள்ளி வன்முறையில் தொடர்பு இல்லாதவர்களை விடுவிக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். கலவரத்துக்கு தொடர்பில்லாத பல அப்பாவிகள் கைது செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்து வரும் நிலையில் திருமாவளவன் இவ்வாறு கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பள்ளியை முற்றுகையிட்டு இளைஞர்கள் பொதுமக்கள் பள்ளி மீது தாக்குதல் நடத்தினர், அங்கிருந்த வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. போலீசார் இதை கலைக்க முயற்சித்தபோது அது கலவரமாக மாறியது. தமிழக உளவுத்துறையின் தோல்வியே கலவரத்திற்கு காரணம் என்ன விமர்சனங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் கலவரத்தில் தொடர்புடையவர்கள் எனக் கூறி போலீசார் 300க்கும் அதிகமானோரே கைது செய்துள்ளனர்.

Dalits arrested in the name of caste in Kaniyamur school riots.. Thirumavalavan angry.

இதில் பலர் அப்பாவிகள் என கூறப்படுகிறது, வேலைக்குச் சென்று வந்தவர்கள், தேர்வெழுத சென்றவர்கள் என பலரும் இதில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மல்க கூறி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்தித்த அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதன் விவரம் பின்வருமாறு:- கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார், அது கொலையா தற்கொலையா என பெற்றோர்கள் உறவினர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

Dalits arrested in the name of caste in Kaniyamur school riots.. Thirumavalavan angry.

மாணவி உயிரிழந்தது கொலையா தற்கொலையா என்பதை காட்டிலும், பள்ளியில் நடந்த வன்முறை எப்படி நடந்தது என்பதிலேயே வழக்கு விசாரணையின் போக்கு உள்ளது. மாணவி எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து ஆய்வு செய்யாமல் வன்முறை எப்படி  நடந்தது  என்பதிலேயே விசாரணை நடந்து வருகிறது. ஆனால் உளவுத்துறை அந்த வன்முறையில் துளியிம் சம்பந்தம் இல்லாதவர்களை கூட வேட்டையாடி வருகிறது. தமிழ்நாடு அரசின் போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஏராளமான தலித் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Dalits arrested in the name of caste in Kaniyamur school riots.. Thirumavalavan angry.

19 வயது மாணவர்கள் முதல் 15 வயது மாணவர்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கலவரத்திற்கு தொடர்பு இல்லாதவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் தொடர்பில்லாதவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட 20 குடும்பத்தினர் டிஜிபியை சந்திக்க வந்தபோது, அவர்களை சந்திக்காமல் டிஜிபி புறக்கணித்துள்ளார். இந்த விவகாரத்தில் சாதியின் பெயரால் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். ஆகஸ்ட் 17ஆம் தேதி எனது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு உள்ளது. அதில் முதல் அமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். இந்த விழா பிஜேபியை தனிமைப்படுத்த ஒரு வருடம் வரை நீடிக்க உள்ளது என்றார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios