Asianet News TamilAsianet News Tamil

பழமையான மயானத்தில் தலித் உடலை புதைக்க தடுத்த கும்பலால் பரபரப்பு..!

பழமையான மயானத்தில் தலித் ஒருவரின் இறந்த உடலை புதைக்கவிடாமல் தடுத்து நிறுத்திய ரியல் எஸ்டேட் கும்பலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Dalit body buried in ancient cemetery
Author
Kovai, First Published Sep 8, 2020, 10:49 PM IST

பழமையான மயானத்தில் தலித் ஒருவரின் இறந்த உடலை புதைக்கவிடாமல் தடுத்து நிறுத்திய ரியல் எஸ்டேட் கும்பலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கோவை மாவட்டத்தில் பொது மயானத்தில் தலித் உடலைப் புதைக்க விடாமல், ரியல் எஸ்டேட் ஆக்கிரமிப்பு கும்பல் நடத்திய அட்டகாசத்தைக் கண்டித்து உயிரிழந்தவரின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் சில அரசியல் கட்சிகளின் உதவியோடு உடல் புதைக்கப்பட்டது.தலித் மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டை ஆக்கிரமிக்கும் ரியல்எஸ்டேட் கும்பலின் முயற்சியைத் தடுத்து நிறுத்த, மாவட்ட நிர்வாகத்தின் உடனடி தலையிட அவசியமானது. தலித் மக்களுக்கான மயானத்தைச் சுற்றுச்சுவர் எழுப்பி சுமார் 65 சென்ட் நிலத்தைப் பாதுகாத்துத் தரவேண்டும். 

Dalit body buried in ancient cemetery

கோவை. துடியலூர் கனுவாய் செல்லும் சாலையில் அண்ணாகாலனி, புது முத்து நகர், காந்தி வீதி உள்ளிட்ட பகுதிகள் உள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் தலித் சமுதாயத்தினர் என அரசால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.இப்பகுதியில் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். அதேபோல் இந்தப் பகுதியில் பொது மயானம் உள்ளது. இந்த மயானம் 80 வருடங்களாக உள்ளது என்று சொல்லப்படுகிறது.இங்கு அனைத்து சாதியினரின் உடல்களும் புதைக்கப்பட்டு வருகிறது.

 இந்த மயானத்திற்கு அருகில், நீலகிரி ரியல் எஸ்டேட் என்ற பெயரில் 7 ஏக்கர் நிலத்தில் வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டுள்ளது. எனினும் அதன் அருகே சுடுகாடு இருப்பதால் நிலங்கள் குறைவான விலைக்கே விற்கப்படுகின்றன. இதையடுத்து தங்களுக்கு இடையூறாக இருக்கும் இந்த சுடுகாட்டை ஒழிக்க வேண்டும் என்ற முடிவோடு, இறந்தவர்களின் உடலை இந்த பகுதியில் புதைக்கக் குறிப்பிட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

குறிப்பாக இந்த மயானத்தில் உடல்களை யாரும் புதைக்கக் கூடாது என தலித் சமுதாய மக்களை இந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் மிரட்டியும் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.  தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரின் உடலைக் குறிப்பிட்ட மயானத்திற்கு உறவினர்கள் புதைக்கக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ரியல் எஸ்டேட் நிர்வாகிகள் உடலைப் புதைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios