கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் தான் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் படித்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருந்த காலத்தில் அதிகளவில் மருத்துவ மாணவர்கள் படித்திருக்கிறார்கள். 

அதிமுக உட்கட்சி தேர்தல் ஜனநாயக ரீதியில் நடந்து வருகிறது. எவ்வித பிரச்சினையும் இன்றி தேர்தல் அமைதியாக நடைபெறுகிறது என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 2 கட்டமாக அதிமுக உட்கட்சி தேர்தல் நேற்று இன்றும் நடைபெறுகிறது. இந்நிலையில், சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் அதிமுக அலுவலகத்தில் நேற்று தேர்தலில் போட்டியிடுவோர் விண்ணப்பம் செய்தனர். இங்கு பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர் செம்மலை, எம்எல்ஏ பாலசுப்பிரமணியம் ஆகியோர் விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டனர்.

இதையும் படிங்க;- AIADMK: திமுகவில் இணைகிறாரா மாஃபா பாண்டியராஜன்? அவரே வெளியிட்ட முக்கிய தகவல்..!

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொள்ளாச்சி ஜெயராமன்;- அதிமுக உட்கட்சி தேர்தல் ஜனநாயக ரீதியில் நடந்து வருகிறது. எவ்வித பிரச்சினையும் இன்றி தேர்தல் அமைதியாக நடைபெறுகிறது. தமிழகத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமல்ல அடுத்து வரும் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறும் என்றார். 

இதையும் படிங்க;- Sekar Babu: மனசாட்சி இல்லாதவங்க கூட இப்படி பேசமாட்டாங்க.. அண்ணாமலைக்கு சரியான பதிலடி கொடுத்த சேகர்பாபு.!

கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் தான் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் படித்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருந்த காலத்தில் அதிகளவில் மருத்துவ மாணவர்கள் படித்திருக்கிறார்கள். 

ஆனால் அதிமுக ஆட்சியில் செய்த சாதனையை திமுக சொந்தம் கொண்டாட முடியாது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தினமும் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. காவல்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. வேதா இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் காணவில்லை என்று தீபா குற்றச்சாட்டுக்கு, பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.