தப்லீக் ஜமாஅத் இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி அல்ல என்றும், ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை யாரும் குற்றம் சொல்லவில்லை  என அரசியல் விமர்சகரும், பாஜக அனுதாபியுமான நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்த பலருக்கு தமிழகத்தில்  கொரோனா தொற்று பரவியதை அறிவோம். ஆனால், சிகிச்சைக்கு பின் அவர்கள் செய்ய முன்வந்திருக்கும் மிக பெரிய உதவியை நாம் அறிவோமா? திருப்பூரை சேர்ந்த முகமது அப்பாஸ் என்பவர், சிகிச்சைக்கு பின்னர், அம்மாவட்ட நிர்வாகத்திடம், நம்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது, பாதிக்கப்பட்டு கொண்டிருப்பது இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் என்பதை உணர வேண்டும். இன்னும் பலர் பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளாமல் இருப்பது உண்மை கலந்த சோகம். அவர்களின் சொந்த நலனை கருத்தில் கொண்டாவது, அவர்கள் முன்வர வேண்டியது அவசியம்.

தப்லீக் ஜமாஅத் மாநாட்டினை குறித்தோ, அதற்கு  சென்றது குறித்தோ விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை. ஆனால், அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு  தொற்று அதிகரித்த நிலையில், அவர்களில் பலரும், அவர்களின் தொடர்புகளும் தாங்களாகவே முன்வந்து பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளவில்லை என்பதே விமர்சிக்கப்பட்டது.

தப்லீக் ஜமாஅத் இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி அல்ல என்றும், ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை யாரும் குற்றம் சொல்லவில்லை என்பதையும் தான் நாம் வலியுறுத்தி கொண்டே இருந்தோம். அவர்களின்  தாமதமான  நடவடிக்கையால் நான் மதவாதியும் அல்ல. போலிமதச்சார்பின்மை பேசுபவனும்  அல்ல. ஒருவரின் மதநம்பிக்கை வாழ்வை மேம்படுத்தும். அடிப்படைவாதம் வாழ்வை சீரழிக்கும். போலிமதச் சார்பின்மை ஒட்டுமொத்த சமுதாயத்தையே நாசமாக்கும். இதை அறிந்தவர்கள் அறிவாளிகள் குணமானவர்கள், இஸ்லாமிய மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

 

கொடிய கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கு பல்வேறு சிகிச்சைகளை அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில், 'ஊநீர்' தானம் செய்ய வந்திருக்கும் இஸ்லாமிய மக்களை வாழ்த்த, நன்றிகள் சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.’’என அவர் தெரிவித்துள்ளார்