கிடுக்கிப் பிடி போடும் அமலாக்கத்துறை !! அடுத்த டார்கெட் டி.கே.சிவகுமாரின் மகள் ! சம்மன் அனுப்பி அதிரவைத்த அதிகாரிகள் !!

முறைகேடாக சம்பாதித்து சொத்துகளை குவித்ததாக கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள்அமைச்சர் சிவக்குமாரின் மகள் ஐஷ்வர்யாவுக்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அளித்துள்ளது.

D.K.Sivakumar daughter  Iswarya summorn

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீட்டில் 8 கோடியே 50 லட்சம் ரூபாய்  சிக்கியது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

D.K.Sivakumar daughter  Iswarya summorn

மேலும் டி.கே.சிவக்குமார் வீட்டில் சிக்கிய  பணம் குறித்து அமலாக்கத்துறை தானாக முன்வந்து வருமானத்துக்கு மீறிய வகையில் சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி ஆனது.

இதையடுத்து அமலாககத்துறை அலுவலகத்தில் டி.கே.சிவக்குமார் ஆஜரானார். 4 நாட்கள் அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியநிலையில், சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் டி.கே. சிவக்குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 3-ம் தேதி கைது செய்தனர். டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் விசாரணை காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

D.K.Sivakumar daughter  Iswarya summorn

சுமார் 600 கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியான சிவக்குமார் அவரது மகள் ஐஷ்வர்யா பெயரில் ஏராளமான சொத்துக்களை வாங்கியதாகவும் பெருமளவு பணத்தை முதலீடுகளில் குவித்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

D.K.Sivakumar daughter  Iswarya summorn
அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் காங்கிரசார் சாலை மறியல் போராட்டத்தில்  நிலையில், வரும் நிலையில் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிவக்குமாரின் மகள் ஐஷ்வர்யாவுக்கு அமலாக்கத்துறை  சம்மன் அளித்துள்ளது.

பெங்களூரு சதாசிவம் நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற அமலாக்கத்துறை இந்த சம்மனை அளித்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios