அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற திருட்டு வழக்கை உடனடியாக சிபிஐக்கு மாற்றக்கோரி சி.வி சண்முகம் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற திருட்டு வழக்கை உடனடியாக சிபிஐக்கு மாற்றக்கோரி சி.வி சண்முகம் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர். இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்த ஓ.பன்னீர்செல்வம், அங்கிருந்த அதிமுக ஆவணங்களை தனது வாகனத்தில் ஏற்றி எடுத்துச் சென்றுவிட்டார்.
இதையும் படிங்க: அதிமுக வரட்டும்.. உன்னையும், உன் பையனையும் பார்க்க போறோம் அறிவாலயத்தையும் பார்க்க போறோம்..CV.சண்முகம்.

மேலும், அங்கு கூடியிருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை கடுமையாக தாக்கியதுடன், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சூறையாடப்பட்டன. இதை அடுத்து கடந்த 11 ஆம் தேதி ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், இருப்பு தொகை, பத்திரங்கள் ஆகியவற்றை ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திருடி சென்றதாக சிவி சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதே போல இ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலைமை கழக பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு பொய் புகார் அளித்திருப்பதாக ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஜே.சி.டி பிரபாகரன் மறுப்பு புகார் அளித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவில் அந்த 4 பேர்.. எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் கொடுத்த அதிர்ச்சி !

இந்த நிலையில் ராயப்பேட்டை காவல் நிலைய போலீசார் எந்த வித நடவடிக்கை எடுக்காததால், உடனடியாக இந்த வழக்கை சிபிஐ அல்லது சுதந்திரமான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தபால் மூலமாக சி.வி.சண்முகம் புகார் அளித்துள்ளார். குறிப்பாக இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் வரும்போது காவல்துறையில் உரிய பாதுகாப்பு அளித்து இருந்தால் இந்த போன்ற கலவர சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்த்திருக்கலாம் என்றும், ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் அத்து மீறி உள்ளே நுழைந்துள்ளார்கள் என நீதிபதி சுட்டிக்காட்டியதை புகார் மனுவில் குறிப்பிட்டு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற சி.வி.சண்முகம் தரப்பில் மனு அளித்துள்ளனர்.
