சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பல ஊடகங்களிலும், வாட்ஸ் அப்-களிலும் தகவல்கள் பரவின. உண்மையில், அமைச்சருக்கு என்ன ஆனது? என்பது பற்றி நாம் விசாரித்தோம்.  

அது குறித்து, அமைச்சரின் நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு நீண்ட நாட்களாகவே கால் நரம்பு சுழற்சி பிரச்சனை இருந்து வந்தது. அதற்காக மாதத்திற்கு ஒரு முறை அப்போலோ சென்று வருவது வழக்கமான ஒன்றாகும். அது மட்டுமின்றி காலநிலை மாற்றம் காரணமாக சளி மற்றும் இன்பெக்சன் ஏற்பட்டுள்ளது. 

இரு உடல்நிலைக் கொளாறுகளையும் ஒரு சேர மருத்துவம் பார்த்துவிடலாம் என்ற எண்ணத்தில்தான் நேற்று காலை அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சு சளி, இன்பெக்சன் காரணமாக மருத்துவம் அவருக்கு அளிக்கப்பட்டது. இது தவறாக பரவி நெஞ்சுவலி என வெளியானது.

 

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அதே நேரத்தில் அதிகாரிகளை சந்தித்து வருகிறார். சாதாரணமாக சேரில் அமர்ந்து கொண்டு, அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அவர் வேலை செய்து வருவதாக அமைச்சரின் நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.