தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் நேற்று எகிறியதால் இன்று முதல் ஊரடங்கு தளர்வை அமல்படுத்த திட்டமிட்டிருந்த முதல்வர் பழனிசாமி எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறிலில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழத்தில் 26 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் வருவதால், இன்று மட்டுமல்ல இப்போதைக்கு தளர்வு வர வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு பரவல் தடுப்புக்காக நாடு முழுவதும் கடந்த 24ம் தேதி மாலை முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மத்திய அரசு கடந்த 15ம் தேதி வெளியிட்ட அரசாணையில் தொற்று பாதிப்பு இல்லாத பகுதியில் மட்டும் ஏப்ரல் 20ம் தேதி முதல் ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படை தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. கொரோனா நோய் தொற்று அதிகமாக இருக்கும் பகுதிகள் சிவப்பு மண்டலம் (ஹாட் ஸ்பாட்) 15க்கு பேருக்கு கீழ் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள பகுதிகள் ஆரஞ்சு மண்டலம், பாதிப்பு இல்லாத பகுதியில் பச்சை மண்டலம் என்று வகை பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி பச்சை மண்டலப் பகுதிகளில் மட்டுமே ஊரடங்கு தளர்வுகளை அமல்படுத்த முடியும். 

 ஊரடங்கு தளர்வு குறித்து பரிந்துரை அளிக்க நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தலைமையிலான 22 பேர் குழு ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கிருஷ்ணனுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார். அதில், தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் முதல்கட்ட  ஆலோசனைகளை முதல்வரிடம் இன்று தெரிவித்துள்ளனர். இதை ஆராய்ந்து முதல்வர் ஊடரடங்கு தளர்வு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க உள்ளார். 

தற்போது நிலவரப்படி தமிழகத்தில்  37 மாவட்டங்கள் நேற்றைய நிலவரப்படி புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டுமே கொரோனா தொற்று பாதிப்பில்லை. ஆகையால், இந்த 3 மாவட்டங்களில் மட்டுமே தளர்வு அமலாக்கலாம் என்று கூறப்படுகிறது. சென்னை, திருச்சி, ஈரோடு, வேலூர் உள்ளிட்ட  26 மாவட்டங்களில் 16க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை ஹாட்ஸ்பாட் பகுதி என்பதால் முதல்வர் அறிவித்துள்ள படி இந்த பகுதிகளில் ஊரடங்கு தளர்வு வாய்ப்பேயில்லை.  

எஞ்சிய 8  மாவட்டங்களில் திருவண்ணாமலை 12, சிவகங்கை 11, ராமநாதபுரம் 10 ஆகிய மூன்று மாவட்டங்கள் பாதிப்பு எண்ணிக்கை இரட்டை இலக்கமாகவும்,  நீலகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு ஒற்றை இலக்காகவும் உள்ளது. இந்த எட்டு மாவட்டங்கள் பாதிப்பு எண்ணிக்கை  இப்படியே நீடிக்குமா  அல்லது எகிறுமா என்று கணிக்க இயலாத நிலை.  நேற்று பாதிக்கப்பட்டால் மீண்டும் நூற்றுக்கும் மேல் போனதால் முடிவெடுக்க முடியாமல் முதல்வர் பழனிச்சாமி திணறலில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால், 3 மாவட்டங்களை தவிர்த்து 34 மாவட்டங்களில்  மே 3ம் தேதி வரை  ஊரடங்கு தொடர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.