Asianet News TamilAsianet News Tamil

Curfew in tamilnadu:தமிழகத்தில் தட்டி தூக்கும் ஒமைக்ரான்.. மீண்டும் ஊரடங்கு.?? அலறும் சுகாதாரத்துறை செயலாளர்.

தற்போதைக்கு 1 லட்சத்து 11 ஆயிரம் படுக்கைகள் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 40,000 படுக்கைகள் பிராணவாயு வசதி கொண்டதாக உள்ளது. 10 ஆயிரம் வெண்டிலேட்டர் படுக்கைகள் உள்ளது. 10 ஆயிரம் ஐசியு படுக்கைகள் உள்ளது. பொதுப் பேருந்துகளில் மற்றும் மீன் அங்காடிகள், காய்கறி அங்காடி போன்ற இடங்களில்  பலர் முக கவசம் அணியாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. 

Curfew in tamilnadu: Omegron picks up speed in Tamil Nadu .. Curfew again .. ?? Screaming People Welfare Secretary.
Author
Chennai, First Published Dec 17, 2021, 10:38 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

ஊரடங்கு போடும் அளவிற்கு நிலைமை மோசமடையவில்லை, அதனால்தான் ஒமைக்ரானை தடுப்பதற்காக தற்போது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அதுபோன்ற ஒரு நிலைமை உருவானால், அதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்பதால் இதில் பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில்  சீனாவில் இருந்து உருவான கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. இதுவரை கொரோனா வைரசால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டு வர முடியாமல் பல நாடுகள் திணறி வருகின்றன. இந்தியா போன்ற நாடுகள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கி மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றன. ஆனாலும் கொரோனா வைரஸ் என்பது  அடிக்கடி  உருமாறி உயிர்ப்புடன் தொடர்கிறது. கொரோனா வைரஸ் டெல்டாவாக மாறி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பிறழ்வுகளுடன் ஒமைக்ரான் வைரசாக அது பரிணமித்துள்ளது. இந்த வைரஸ் அதிக மாறுபாடு கொண்டுள்ளதால் இந்த வைரஸ் உலக அளவில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வைரசை தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் இந்திய அரசு ஈடுபட்டு வரும் நிலையில் சுமார் 68க்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Curfew in tamilnadu: Omegron picks up speed in Tamil Nadu .. Curfew again .. ?? Screaming People Welfare Secretary.

இந்நிலையில் தமிழகத்தில் அந்த வைரஸ் தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டிருப்பதாக நேற்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக சென்னை வந்த நபருக்கு ஒமிக்கிரான் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவர் நலமுடன் இருப்பதாகவும், தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் அவரது குடும்பத்தினர் 6 பேர் அவரோடு தொடர்பில் இருந்த வளசரவாக்கத்தை சேர்ந்த நபர் உள்ளிட்டவர்களுக்கு ஒமைகிரான் பாதிப்பு உள்ளதாக அச்சம் இருப்பதாகவும், மரபணு பரிசோதனை மறுஆய்வுக்காக மீண்டும் பெங்களூருவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார். பொதுமக்கள் இதன் தீவிரத்தை உணர்ந்து இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார். தமிழகம் 100% தடுப்பூசி செலுத்திய மாநிலம் என்ற இலக்கை எட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்றார். இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் :- இரண்டு தவனை தடுப்பூசி, சமூக இடைவெளி, கை கழுவுதல், கட்டாயம் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட பொது சுகாதார வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இது பதற்றத்திற்கான நேரம் இல்லை ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை மக்கள் அளிக்க வேண்டும் என்றார். மேலும் பேசிய அவர், ஒமைக்காரனை பொருத்தவரையில் பொதுமக்கள் பதட்டமடைய கூடாது. இது ஒரு வகையான உருமாறிய கொரோனா, இது வேகமாக பரவக்கூடிய தன்மை உடையது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும், பொதுஇடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அறைகளில் காற்றோட்டம் நிறைந்த பகுதிகளில் நாம் இருக்க வேண்டும். இதை முறையாகப் பின்பற்றினாலே இந்த வைரஸ் பரவுவதை தடுக்க முடியும். ஏதாவது ஒருவருக்கு ஏதாவது ஒரு அறிகுறி தென்பட்டால் உடனே அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் வைரஸ் இருப்பது உறுதியானால் உடனே அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அனைத்து மருத்துவ வசதிகளும் அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கடந்த மே மாதத்தில் 1 லட்சம் படுக்கைகள் அமைக்கப்பட்டது. தற்போது மூன்றிலிருந்து 5 விழுக்காடு படுக்கைகள் நிரம்பியுள்ள நிலையில் முதலமைச்சர் அனைத்தையும் தயார் நிலையில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

Curfew in tamilnadu: Omegron picks up speed in Tamil Nadu .. Curfew again .. ?? Screaming People Welfare Secretary.

தற்போதைக்கு 1 லட்சத்து 11 ஆயிரம் படுக்கைகள் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 40,000 படுக்கைகள் பிராணவாயு வசதி கொண்டதாக உள்ளது. 10 ஆயிரம் வெண்டிலேட்டர் படுக்கைகள் உள்ளது. 10 ஆயிரம் ஐசியு படுக்கைகள் உள்ளது. பொதுப் பேருந்துகளில் மற்றும் மீன் அங்காடிகள், காய்கறி அங்காடி போன்ற இடங்களில்  பலர் முக கவசம் அணியாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. மீண்டும் மீண்டும் நான் சொல்கிறேன் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். ஒமைக்ரான் தமிழகத்தில் நுழைந்துள்ள நிலையில் ஊரடங்கு போடப்படுமா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராதாகிருஷ்ணன்,  தற்போதைக்கு ஊரடங்கு போடும்  அளவிற்கு நிலமை மாறவில்லை, அப்படி ஒரு நிலை உருவானால் மத்திய மாநில அரசுகளுக்கும், தமிழக  முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். ஆனால் அப்படி ஒரு நிலைமை வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த வைரசை தடுப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் முகக்கவசம் அணிவது அவசியம் என அவர் எச்சரித்துள்ளார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios