தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.34 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு 1.72 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,741 ஆக அதிகரித்துள்ளது.


 
இந்நிலையில், ஊரடங்கு முடிய உள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதேபோல, ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும்,தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் வழிபாட்டுத் தலங்களில் மக்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.