Asianet News TamilAsianet News Tamil

ஊரடங்கு மேலும் நீட்டிக்க பரிந்துரை... அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு தகவல்..!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மதுரையில் முழு ஊரடங்கு ஜூலை 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

curfew extend in madurai...minister rb udayakumar information
Author
Madurai, First Published Jul 12, 2020, 2:25 PM IST

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மதுரையில் முழு ஊரடங்கு ஜூலை 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தை தொடர்ந்து மதுரையிலும் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் 20 நாட்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. சராசரியாக 280 பேர் தினமும் பாதிக்கப்படுகின்றனர். மொத்த பாதிப்பு 6000ஐ கடந்துள்ளது. உயிரிழப்பு 100ஐ கடந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் 4163-ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1803-ஆக உள்ளது. 

curfew extend in madurai...minister rb udayakumar information

முதல் மூன்று இடத்தில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை காட்டிலும் டிஸ்சார்ஜ் விகிதம் மதுரையில் வெகு குறைவாகவே உள்ளது. இதனிடையே, மதுரையில் இன்று நள்ளிரவு வரை முழு ஊரடங்கு முடிவடைகிறது. 

curfew extend in madurai...minister rb udayakumar information

இந்நிலையில், மதுரை மாநகராட்சியில் மேலும் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 14.07.2020 நள்ளிரவு 12.00. மணி முடிய முழு ஊரடங்கு நீட்டிப்படுகிறது. மேலும் 14-ம் தேதிக்கு பிறகு 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

Follow Us:
Download App:
  • android
  • ios