கவுன்சிலர் கீதாவின் கணவரும், மாவட்ட பொருளாளருமான குணசேகரன், திமுக கவுன்சிலர்கள் 30 பேரில் 23 பேரை இரவோடு இரவாக கடத்தி சென்று சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர் பன்னீர்செல்வம் சமரசம் செய்தும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் கடலூர் திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடலூர் மேயர் தேர்தலுக்கு திமுக தலைமை அறிவித்த மேயர் வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சியின் மற்றொரு அணியினர் கவுன்சிலர்களை சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைப்பெற்றது. 45 வார்டுகளைக் கொண்ட இந்த மாநகராட்சித் தேர்தலில் திமுக நேரடியாக 27 இடங்களையும், அதிமுக 6 இடங்களையும், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலா 3 இடங்களையும், பாஜக மற்றும் காங்கிரஸ் தலா ஒரு இடங்களையும், சுயேட்சைகள் 3 இடங்களையும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற 3 சுயேட்சைகள் அன்றைய தினமே திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டனர்.

இந்நிலையில், நேற்று 21 மாவட்டங்களுக்கான மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டன. இன்று மறைமுகத் தேர்தல் நடந்து வருகிறது. போட்டிகள் இருந்தால் தேர்தலும், போட்டிகள் இல்லையென்றால் ஒருமனதாகவே மேயர் மற்றும் துணை மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்நிலையில், முதல் மாநகராட்சியின் முதல் மேயர் பதவியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட வேண்டுமென்று நினைத்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தனது தீவிர ஆதரவாளரான கடலூர் நகரச் செயலாளர் கே.எஸ்.ராஜாவின் மனைவி சுந்தரியை களமிறக்கினார். இதற்கு மற்றொரு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், துணை மேயர் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது மேலும் திமுக கவுன்சிலர்களை அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில், கவுன்சிலர் கீதாவின் கணவரும், மாவட்ட பொருளாளருமான குணசேகரன், திமுக கவுன்சிலர்கள் 30 பேரில் 23 பேரை இரவோடு இரவாக கடத்தி சென்று சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர் பன்னீர்செல்வம் சமரசம் செய்தும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் கடலூர் திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்று நடக்கும் மேயர் தேர்தலில் சுந்தரி ராஜாவை ஆதரித்து கவுன்சிலர்கள் வாக்களிப்பார்களா? அல்லது கீதா குணசேகரன் போட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டு அவரை ஆதரிப்பார்களா? என்கிற பரபரப்பும் கடலூர் திமுகவில் அதிகரித்துள்ளது.
