Asianet News TamilAsianet News Tamil

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை… ரூ.20 லட்சம் மதிப்பிலான கிரிப்டோ கரன்சி முதலீடு கண்டுபிடிப்பு!!

நாமக்கல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 20 லட்சம் மதிப்பிலான கிரிப்டோ கரன்சி முதலீடு உட்பட பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

crypto currency investment worth 20 lakhs discovered in raid conducted at former admk mlas house
Author
Namakkal, First Published Aug 12, 2022, 10:03 PM IST

நாமக்கல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 20 லட்சம் மதிப்பிலான கிரிப்டோ கரன்சி முதலீடு உட்பட பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுக்குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், தான் மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் உள்ள நிறுவனங்களின் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளது சம்மந்தமாக அவர் மீது கடந்த 11 ஆம் தேதியன்று நாமக்கல் மாவட்டம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.

இதையும் படிங்க: வீரப்பனுக்கும் பாமகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... உண்மையை போட்டு உடைத்த முகில்.

மேற்படி வழக்கு தொடர்பாக கே.பி.பி.பாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், அவரது அலுவலகங்கள், அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நமர்களின் இருப்பிடம் உட்பட நாமக்கல்லில் 28 இடங்கள், திருப்பூரில் ஒரு இடம், மதுரையில் ஒரு இடம் ஆக மொத்தம் 30 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் இன்று (12.08.2022) சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரு வார்த்தை போதும் ஆனால் டிஜிபியிடம் இருந்து அது வருவதே இல்லை.. நீதிபதி வேதனை.

இந்த சோதனையில் ரூ.26,52,660 ரொக்கம், ரூ.1,20,000 மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள், 4 சொகுசு கார்கள், பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், கடன் பத்திரங்கள், வங்கி கணக்குகள், 1.680 கிலோ எடையுள்ள தங்க நகைகள், 6.625 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள், 20 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சி முதலீடுகள், முக்கிய கணினி பதிவுகள் ஆகியவை கண்டறியப்பட்டு, வழக்கிற்கு தொடர்புடைய ரூ.14,96,900 ரொக்கம் மற்றும் வழக்கு தொடர்புடைய 214 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios