காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டவர்களில் திருநாவுக்கரசர் ஆட்களே அதிகம் என கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழகத்தில் பண மதிப்பு நீக்க எதிர்ப்பு இயக்கம் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயற்குழு கூட்டம்  காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக பார்வையாளரும், கர்நாடக மாநில அமைச்சருமான. டி.கே. சிவக்குமார், முன்னாள் மத்திய அமைச்சர்  கே. ரஹ்மான்கான்,  சின்னா ரெட்டி, ப..சிதம்பரம், கே.ஆர்.ராமசாமி, குமரி அனந்தன், ஈ.வெ.கி.ச.இளங்கோவன், கே.வி.தங்கபாலு,  சுதர்சன நாச்சியப்பன்,   தனுஷ்கோடி ஆதித்தன்   முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள்-இன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முன்னணி மற்றும் துணை அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். 
இந்த கூட்டத்தில் தனது ஆட்களை அதிக அளவில் அழைப்பிதழ் கொடுத்து திருநாவுக்கரசர் அழைத்துள்ளதாக புகார் எழுந்தது. கட்சியில் ஆரம்பம் முதல் இருக்கும் ஆட்களை விட்டுவிட்டு அதிமுகவிலிருந்து , பாஜக போய் பின்னர் காங்கிரசுக்கு வந்த திருநாவுக்கரசுரன் உடன் வந்தவர்களுக்கு செயற்குவில் பதவி கொடுத்து அழைத்து வருவதாக பிரச்சனை எழுந்தது. 
இதனால் கூட்டத்தில் சலலப்பு ஏற்பட்டது.