cricketter siddu will jailed for murder case
பஞ்சாப்மாநிலஅமைச்சரும், முன்னாள்கிரிக்கெட்வீரருமானசித்துமீதானகொலைவழக்கு 30 ஆண்டுகள்இழுக்கப்பட்டநிலையில், இந்தவழக்கின்தீர்ப்புஉறுதிசெய்யப்பட்டுசித்துசிறைசெல்வதுஉறுதியாகிஉள்ளது.
கடந்த 1988 ஆம் ஆண்டு பிரபல கிரிக்கெட் வீரர் சித்து, ஒரு கிராமத்தைச் சேர்ந்த முதியவர் குர்னாம்சிங் என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். வார்த்தைப் போர் முற்றியதில் அந்த முதியவலை சித்து தாக்கியுருக்கிறார். இதில் காயமடைந்த அந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து சித்து மீது கொலை வழக்கு பதவி செய்யப்பட்டு பஞ்சாப், அரியானா உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கின் மீது கடந்த 2006 ஆம் ஆண்டு சித்துவுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், முதியவர் சித்து தாக்கி மரணமடையவில்லை மாரடைப்பால்தான் இறந்தார் என சித்து தரப்பில் வாதிடப்பட்டது. அற்றொரு தரப்பில் சித்து தாக்கியதில் முதியவருக்கு மூளையில் ஏற்பட்ட பாதிப்பால்தான் மரணமடைந்தார் என கூறப்பட்டது.

இந்த வழக்கு சுமார் 30 ஆண்டுகள் இழுத்தடிக்கப்ப்ட்டது. . தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், முன்னர் வழங்கிய தீர்ப்பின் படி சித்து 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து சித்து மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளார்.
