Asianet News TamilAsianet News Tamil

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடப் போகும் தொகுதிகள் இவைதான் !!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மற்றும் தென்காசி தொகுதியில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

cpm seat sharing dioligue
Author
Chennai, First Published Mar 9, 2019, 8:22 PM IST

வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக தலைமையில் உருவாகியுள்ள கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கூட்டணியில் தேமுதிக இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக,இடது சாரிகள், மதிமுக ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. திமுக 20 , காங்கிரஸ் 10, இடது சாரிகள் தலா 2. விசிக 2, இந்திய ஜனநாயக கட்சி 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 , மதிமுக 1 , கொமதேக 1 என்று போட்டியிடுகின்றன.

cpm seat sharing dioligue
இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து இன்று காங்கிரஸ் கட்சி அதன் தலைவர் அழகிரி தலைமையில் பேச்சு நடத்தினர். இதே போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் தலைமையில் பேச்சு நடத்தியது.

இதன்பின்னர் பேச்சுவார்த்தைக்கு வரும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்தது. இதனை ஏற்று மார்க்சிஸ்ட் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முன்னாள் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ சவுந்தரராஜன் ஆகியோர் அண்ணா அறிவாலயம் சென்று திமுக குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

cpm seat sharing dioligue

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை திருப்பூர், தென்காசி (தனி) தொகுதிகளையும் மாநகரப் பகுதிகளில் வடசென்னை தொகுதியையும் விருப்பத் தொகுதிகளாக பட்டியலிட்டு திமுகவிடம் அளித்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து  திருப்பூர், தென்காசி தொகுதிகள் மார்க்சிஸ்ட்டுக்கு ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இது தொடர்பாக நாளை மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

தென்காசி தொகுதியில் ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொ.லிங்கம் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். ஆனால் இந்தமுறை தங்களுக்கு தென்காசி தொகுதி தங்களுக்கு வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்துவிட்டதால் மார்க்சிஸ்ட் தரப்பில் தென்காசி தொகுதியை கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios