Asianet News TamilAsianet News Tamil

சேலம் உருக்காலை தனியார் மயமாவதை தடுத்து நிறுத்தியவர் கலைஞர் கருணாநிதி… சீத்தாராம் யெச்சூரி அதிரடி பேச்சு…

cpm leader yechuri speech in chennai ymca ground ...karunandhi birthday function
cpm leader yechuri speech in chennai ymca ground ...karunandhi birthday function
Author
First Published Jun 3, 2017, 9:26 PM IST


சேலம் உருக்காலை தனியார் மயமாவதை தடுத்தவர் திமுக தலைவர் கருணாநிதி என்றும் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக மத்திய அரசு உறுதியளித்திருந்தது, ஆனால் தற்போது வேலைவாய்ப்பு அளவு குறைந்து கொண்டு வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் மற்றும் சட்டபேரவை வைர விழா பொதுக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று பேசினார்.

cpm leader yechuri speech in chennai ymca ground ...karunandhi birthday function

அப்போது நான்  சென்னையில் பிறந்தேன், ஹைதராபத்தில் படித்தேன், டெல்லியில் வசிக்கிறேன் . எனது அடையாளம் இந்தியன என சுவையாக தெரிவித்தார்.

கருணாநிதி தனியார் மயமாதலுக்கு எதிராக எங்களுடன் போராடியவர். மதசார்பின்மை கொள்கையில் உறுதியாக இருந்தார் என பாராட்டுத் தெரிவித்தார்.

சேலம் உருக்காலை தனியார்மயமாவதை தடுத்தவர் திமுக தலைவர் கருணாநிதி. வருடத்திற்கு 2 கோடி வேலைவாய்ப்பு தருவதாக மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால் தற்போது வேலைவாய்ப்பு அளவு குறைந்து கொண்டு வருகிறது என யெச்சூரி குற்றம்சாட்டினார்.

கருணாநிதி தனது எழுத்து வசனத்தால் தமிழ் திரையுலகின் போக்கை மாற்றியவர். கருணாநிதி மிகச்சிறந்த நகைச்சுவை உணர்வு உடையவர் என்று தெரிவித்த அவர் உதாரணமாக ஒரு நிகழ்வை சுட்டிக் காட்டினார்.

cpm leader yechuri speech in chennai ymca ground ...karunandhi birthday function

1996 ல் புதிய பிரதமர் யார் என்று தீர்மானிக்கும் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் என்னிடம் பேசிய கலைஞர் இந்த கூட்டத்தில் நீதான் வில்லன் என்றார்

நான் வில்லன் என்று சொன்னவுடன் அதிர்ச்சியுடன் ஏன் அப்படி கூறிளிறீர்கள் என கேட்டேன். அதற்கு அவர்,  ஆமா நீ என்னிடம் தமிழில் பேசுகிறாய் , சந்திரபாபு நாயுடுவிடம் தெலுங்கில் பேசுகிறாய் , சுர்ஜித்திடம் இந்தியில் பேசுகிறாய் , ஜோதிபாசுவிடம் பெங்காளியில் பேசுகிறாய் யாரிடம் என்ன பேசுகிறாய் என்று யாருக்கு தெரியும் ஆகையால் நீதான் இந்த கூட்டத்தில் வில்லன் என்றார். அவரது நகைச்சுவை உணர்வு எனக்கு ரொம்ப பிடிக்கும் என யெச்சூரி தெரிவித்தார்..

தற்போது இருக்கும் அரசியலில் சூழலில் மு.க.ஸ்டாலினுக்கு பெரும் பங்கு உள்ளது. பாஜக அரசில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது, இளைஞர்கள், விவசாயிகள் பிரச்சினைக்கு தீரவில்லை. பல்வேறு நாடுகளில் பாசிச ஆட்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. நாட்டின் மாற்றத்துக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்திருக்கிறோம்" என்று அவர் கூறினார்

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios