Asianet News TamilAsianet News Tamil

பாராட்டு விழாவை எதிர்பார்த்து அறிவித்தாரா முதலமைச்சர்...!! சந்தேகம் கிளப்பும் தோழர் முத்தரசன்...!!

கேரளா ,  புதுச்சேரி ,  உள்ளிட்ட 7 மாநிலங்களில் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என கூறியுள்ளது போல் தமிழக அரசும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் . 

CPI state secretary mutharasan talk about delta announced by cm edapadi palanichamy
Author
Chennai, First Published Feb 19, 2020, 6:02 PM IST

காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது ,  அதற்கு அதிமுக அரசு துணை போகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார் .  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சிறப்பு மாநில மாநாடு நடைபெற்றது .   அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டார் , பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கினார் . 

CPI state secretary mutharasan talk about delta announced by cm edapadi palanichamy

காவிரி டெல்டாவில் நெல் கொள்முதலில் பெரும் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து நாங்கள் கூறி வருகிறோம் ,  லாரிக்கு விவசாயிகளிடமிருந்து கட்டாயமாக மூட்டைக்கு 40 ரூபாய்  வசூலிக்கப்படுகிறது ,  முதலில் அதை தடுத்து நிறுத்த வேண்டும் அதைவிட்டுவிட்டு அங்கு பணியாற்றும் பணியாளர்களை பணி இடைநீக்கம் செய்து நிர்வாகம் நன்றாக  போலி நாடகம் நடத்துகிறார்கள் .  தற்போது தொழிற்சங்கத்தின் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக நோட்டிஸ் வழங்கியுள்ளனர் .  டாஸ்மாக்குக்கு இலக்கு நிர்ணயம்  செய்யும் இந்த அரசு நெல் கொள்முதலுக்கு இலக்கு நிர்ணயித்து முன் தயாரிப்பு வேலைகளில்  ஈடுபடவேண்டும் .  குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் மட்டும் போராடவில்லை அனைத்து தரப்பு மக்களும் போராடுகின்றனர் . 

CPI state secretary mutharasan talk about delta announced by cm edapadi palanichamy

கேரளா ,  புதுச்சேரி ,  உள்ளிட்ட 7 மாநிலங்களில் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என கூறியுள்ளது போல் தமிழக அரசும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் .  காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக முதல்வர் அறிவித்ததை வரவேற்கிறோம் இதற்காக முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவதாக கூறுவது  விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும் ,  காவிரி டெல்டா பகுதியை  பாலைவனமாக்கமத்திய அரசு முயற்சி செய்கிறது அதற்கு மாநில அரசு துணை போகிறது என்ற முத்தரசன் ,  வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தொடரும் என்றார் .

 

Follow Us:
Download App:
  • android
  • ios