Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாட்டில் பசுவதை தடுப்புச் சட்டம்..?? பின்னணியில் பாஜக.. அலறி துடிக்கும் செ.கு தமிழரசன்.

தமிழ்நாட்டில் பசுவதை தடுப்பு சட்டம் இல்லை என்றாலும் அரசு அதிகாரிகள் அது இருப்பது போல செயல்படுகின்றனர் என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு தமிழரசன் குற்றம்சாட்டியுள்ளார். மாட்டிறைச்சி வியாபாரிகள்  சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.

Cow Slaughter Prevention Act in Tamilnadu..?? BJP in the background. Se.Ku Tamilarasan.
Author
First Published Oct 10, 2022, 6:03 PM IST

தமிழ்நாட்டில் பசுவதை தடுப்பு சட்டம் இல்லை என்றாலும் அரசு அதிகாரிகள் அது இருப்பது போல செயல்படுகின்றனர் என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு தமிழரசன் குற்றம்சாட்டியுள்ளார். மாட்டிறைச்சி வியாபாரிகள்  சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நாராயணப்பன் தெரு பகுதியில் தமிழ்நாடு மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,  இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு தமிழரசன் கலந்து கொண்டார். அப்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி என அனைத்து இடங்களிலும் மாட்டிறைச்சி அறுவை கூடங்களை அரசு அமைத்து தரவேண்டும்.

Cow Slaughter Prevention Act in Tamilnadu..?? BJP in the background. Se.Ku Tamilarasan.

தமிழகம் முழுதும் பழுதடைந்துள்ள மாட்டிறைச்சி அறுவை கூடங்களை புதுப்பித்து தரவேண்டும். மதம் சார்ந்த அரசியல் நிகழ்வுகள் மற்றும் அரசு பொது விடுமுறை காலங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை தட்டி பறிக்கும் வகையில் இறைச்சிக் கூடங்களை வலுக்கட்டாயமாக மூட கட்டாயப்படுத்தக்கூடாது, இதுபோன்ற அரசு ஆணைகளை தடைசெய்ய வேண்டும், மாட்டிறைச்சி வியாபாரிகள்  வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் நடைமுறையில் உள்ள விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1860 இல் 2017, 2021 -ல் உருவாக்கப்பட்ட சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செ.கு தமிழரசன் பேசிய விவரம் பின்வருமாறு:- பசுவதை தடுப்புச் சட்டம் என்பது தமிழகத்தில் இல்லை ஆனால் அந்த சட்டம் நடைமுறையில் இருப்பது போல அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர். இதன் பின்னணியில் மத அரசியல் மட்டுமின்றி கார்ப்ரேட் அரசியலும் இருக்கிறது, இந்தியாவில் மாட்டிறைச்சிக்கு தடைவிதித்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. யார் பசுவதை தடுப்பு சட்டம் வேண்டும் என்று சொல்கிறார்களோ அவர்கள் தான் மாட்டிறைச்சி வர்த்தகத்தை செய்கிறார்கள். இது ஒருவகையான மறைமுக கார்ப்பரேட் அரசியல்.

Cow Slaughter Prevention Act in Tamilnadu..?? BJP in the background. Se.Ku Tamilarasan.

இதன் பின்னணியில் பாஜக உள்ளது. 70 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணல் அம்பேத்கர் சொன்னார், உங்கள் வணக்கத்திற்குரிய மாடுகளை இறந்தபிறகு மட்டும் ஏன் அறுக்க கொடுக்கிறீர்கள், இதுதான் நீங்கள் கோமாதாவுக்கு செலுத்துகிற மரியாதையா. உண்மையான வழிபாடா? என அம்பேத்கர் கேட்டார். அதை தான் நானும் இப்போது கேட்கிறேன், பலர் மாட்டிறைச்சிக்காக கொள்ளப்படுகிறார்கள், மனிதனின் உயிரை விட மாட்டிறைச்சி முக்கியமானதா. இவ்வாறு அவர் கூறினார்.  
 
Follow Us:
Download App:
  • android
  • ios