கொரோனா தொற்று நாட்டை விட்டு முற்றிலும் நீங்கவில்லை, கொரோனா நெருக்கடி முடிந்து விட்டது என்று நாங்கள் கூறவில்லை. வடிவங்களை மாற்றி மீண்டும் அது பரவுகிறது. இதனால் பெருந்தொற்று நோய்க்கு எதிரான போரில் மக்கள் தங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை குறைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் முற்றிலுமாக நம்மை விட்டு நீங்கவில்லை, தனது வடிவத்தை மாற்றி மீண்டும் பரவி வருகிறது என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
கொரோனா
இந்தியாவில் கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடியது. இதில், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். மேலும், பொதுமக்கள் சொல்ல முடியா துயரம் அடைந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக கணிசமாக குறைந்து பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

புதிய வடிவில் பரவல்
இந்த சூழலில் ராம நவமியை முன்னிட்டு பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூனாகத் கதிலாவில் அமைந்திருக்கும் உமியா மாதாகோயில் நிறுவன தின விழாவில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்;- கொரோனா தொற்று நாட்டை விட்டு முற்றிலும் நீங்கவில்லை, கொரோனா நெருக்கடி முடிந்து விட்டது என்று நாங்கள் கூறவில்லை. வடிவங்களை மாற்றி மீண்டும் அது பரவுகிறது. இதனால் பெருந்தொற்று நோய்க்கு எதிரான போரில் மக்கள் தங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை குறைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

எச்சரிக்கும் பிரதமர் மோடி
இடைநிறுத்தமாக வைரஸ் தொற்று பாதிப்பு இப்போது குறைந்திருக்கலாம். ஆனால், உருமாற்றம் அடைந்து மீண்டும் எப்போது பரவும் என்பது யாருக்கும் தெரியாது. வைரஸ் பரவலைத் தடுக்க இதுவரை 185 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்த சாதனை உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இது மக்களால் மட்டுமே சாத்தியமானது என்று தெரிவித்துள்ளார்.
