கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜி, தான் இருந்த அனைத்துக் கட்சிகளிலும் அம்மாவட்டத்தின் முக்கியப் புள்ளியாக இருந்த நிலையில். திமுக-வில் செந்தில் பாலாஜி இணைந்த பிறகு , ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், இன்று அவர் அம்மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திமுகவில் பொறுப்பு வாங்கிய கையேடு தினகரனின் கூடாரத்தில் இருக்கும் சில முக்கிய புள்ளிகளை திமுகவிற்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ள தினகரனின் கம்பியூட்டராக விளங்கிய செந்தில் பாலாஜி களத்தில் இறங்கியுள்ளார்.

அதன் முதல் முயற்சியாக டிடிவி தினகரனின் அமமுக கட்சியை சேர்ந்த கோவை தெற்கு மாவட்ட இலக்கிய அணித் தலைவர் பொன்மலை குமாரசாமி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். 

இந்த நிகழ்வின் போது திமுகவின் பொருளாளர் துரைமுருகன், துணைப் பொது செயலாளர் ஐ.பெரியசாமி, திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, கோவை தெற்கு மாவட்ட பொருளாளர் தென்றல் செல்வராஜ், வட சித்தூர் ஊராட்சி கழக ஏ.பி.எஸ்.சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.