மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர் கே நகர் தொகுதியில்  கடந்த மூன்று மாதங்களில்  அதிக அளவு  வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர் 

இது குறித்து, நீதிமன்றம் தானக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர்  ஒருவர் முன்வைத்த முறையீட்டை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு வழக்குகளை விசாரிக்க துவங்கிய போது வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் எழுந்து

மறைந்த முதல்வர் ஜெயல்லிதாவின தொகுதியான சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலங்களில் 6 ஆயிரத்து 924 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர் என ஆங்கில பத்திரிக்கையில் ஒன்றில் செய்தியை வெளியாகியுள்ளது.
 மேலும் தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் 10.22 லட்சம் புது வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பாக இந்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டுமென முறையிட்டார்.

அப்போது நீதிபதிகள்,  இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் கவனித்துக்கொள்ளும் என கூறி அவரின் முறையீட்டை ஏற்க மறுத்தனர்.