Asianet News TamilAsianet News Tamil

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை !! பிற்பகலுக்குள் முடிவு !!

நாடு முழுவதும் 542 நாடாளுமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி தொடருமா அல்லது புதிய அரசு அமையுமா ? தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா போன்ற புதிரான கேள்விகளுக்கு இன்று பிற்பகலுக்குள் ஓரளவு விடை தெரிந்துவிடும்.
 

counting started
Author
chennai, First Published May 23, 2019, 8:06 AM IST

17 ஆவது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் 67.1 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் மிகவும் அதிகபட்சமாக பதிவான வாக்குகள் இதுதான். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்கு தொடங்கியது.
 
முதலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. மேலும் விவிபாட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகைச் சீட்டுகள் பின்னர் எண்ணப்பட உள்ளன. 

counting started

காலை 10 மணி முதல் முதற்கட்ட முன்னணி நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகலில் எந்தக் கட்சி அல்லது எந்தக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நிலவரம் தெரிந்துவிடும்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைப்போம் என்ற நம்பிக்கையில் பாஜக உள்ளது. 

counting started

இதே போல் எதிர்க்கட்சியினர் அதிக இடங்களில் வென்று கூட்டணி அரசு அமையும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
இதனிடையே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா போன்ற சந்திகங்களுக்கும் இன்று விடை கிடைத்துவிடும். 

இதில் யாருடைய எதிர்பார்ப்பு நிறைவேறப்போகிறது,  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நிஜமாகுமா பொய்யாகுமா என்பதெல்லாம் பிற்பகலில்  தெரிந்துவிடும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios