5 ஆண்டு காலம் பேரணாம்பட்டு நகர மன்ற தலைவராகவும், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காத்தவராயன் தன் இறுதிக்காலம் வரை குடிசை வீட்டில் தான் வாசித்து வந்தார். 

கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வேலுார் மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் காத்தவராயன் வெற்றி பெற்றார். இதய அறுவை சிகிச்சைக்காக, சென்னையில் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை காத்தவராயன் உயிரிழந்தார். இவரது மறைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், திருமணம் செய்து கொள்ளாத காத்தவராயன் இவர் 10-ம் வகுப்பு வரை படித்தவர். 1980-ம் ஆண்டு முதல் திமுக உறுப்பினர். திமுகவில் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர், மாவட்ட பிரதிநிதி, வேலுார் மத்திய மாவட்ட துணைச்செயலர் என பல பதவிகளை வகித்துள்ளார். பேரணாம்பட்டு நகராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கவுன்சிலராக இருந்தால் கோடி கோடியாக சம்பாதித்து விலை உயர்ந்த கார்கள், அடுக்குமாடி வீடுகள் இருப்பது தான் வழக்கம். ஆனால், தன் இறுதிக்காலம் வரை எளிமையாக குடிசை வீட்டில் தான் வசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.