Asianet News TamilAsianet News Tamil

கூட்டுறவுத்துறையில் நடக்கும் ஊழல்களை ஒழிக்க முடியாது.. அடித்து தூள் கிளம்பும் அதிகாரி.!!

ரேசன் கடை ஊழலில் ஈடுபட்ட பணியாளர்கள் எந்த விசாரணையும் இன்றி பணியில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Corruption in the co-operative sector can not be eradicated.
Author
Tamilnadu, First Published Jun 16, 2020, 10:45 PM IST

ரேசன் கடை ஊழலில் ஈடுபட்ட பணியாளர்கள் எந்த விசாரணையும் இன்றி பணியில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Corruption in the co-operative sector can not be eradicated.

சிவகங்கை மாவட்டம்.காரைக்குடி கீழத்தெரு பகுதியில் உள்ள ரேசன் கடையில் பொருட்கள் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து நடைபெறுவதாக பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் கூட்டுறவு விற்பனை பண்டகசாலை (பாம்கோ)மூலம் கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யக்கூடிய பொருள்கள் வெளிமார்கெட்டில் விற்பனை செய்ததாக சிவகங்கை திமுக நகர்செயலாளர் துரை.ஆனந்த் குற்றம் சாட்டியிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரைக்குடி பகுதியில் அம்மா கூட்டுறவு அங்காடியில் ரேசன் அரிசியை பட்டை தீட்டி விற்பனை செய்து வந்ததை காரைக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆதிஜெகநாதன் கண்டுபிடித்து புகார் செய்து வந்தார்.

 இந்த நிலையில் காரைக்குடியில் பூட்டிக்கிடந்த ரேசன் கடையின் சாவியை அக்கடையின் பொறுப்பாளர் பாலு காணாமல் போய் விட்டதாக அதிகாரிகளிடம் தெரிவித்து மாட்டிக்கொண்டார்.இந்த பாலு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உண்டு. ஏற்கனவே மதுரையில் இருந்து வந்த துணை பதிவாளர் ஒருவருக்கு ஆல்இன்ஆளாக இருந்து செயல்பட்டவராம்.அந்த அதிகாரி இருக்கும் போது பாலு நிழல் அதிகாரியாகவே செயல்பட்டார்.

Corruption in the co-operative sector can not be eradicated.
 
இந்த நிலையில் காரைக்குடி பாம்கோ- கடை -3 இருந்து பொருள்களை கடை பொறுப்பாளர் வெளிச்சந்தையில் விற்பனை செய்து வந்து தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இதன்பேரில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சுரேந்திரன், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து, காரைக்குடி தாசில்தார் பாலாஜி, காரைக்குடி குடிமைப்பொருள் தாசில்தார் அந்தோணி ராஜ் ஆகியோர் அந்த ரேசன் கடையில் திடீர் சோதனை நடத்த சென்றனர்.

மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் முறைகேட்டில் ஈடுபட்ட ரேசன் கடை ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் மீண்டும் விற்பனையாளர் பாலுக்கு காரைக்குடியிலேயே வேலை போட்டுக்கொடுத்திருக்கிறார் மேலாண்மை இயக்குனர் திருமாவளவன்.பள்ளத்தூர் பாம்கோ இரண்டு ரேசன் கடைக்கும் ஒரே பெண் ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Corruption in the co-operative sector can not be eradicated.
இதுகுறித்து பாம்கோ மேலாண்மை இயக்குனர் திருமாவளவனிடம் பேசினோம்." ரேசன் முறைகேட்டில் ஈடுபட்டுவந்த விற்பனையாளர் பாலு உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு சிறிய அளவில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உரிய விசாரணை நடத்தி அவர்களிடம் விளக்கம் வாங்கிய பிறகு தான் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு துறையில் நடக்கும் முறைகேடுகள் என்பது மூக்கு இருக்கும் வரை சளி இருக்கத்தான் செய்யும் என்பது போல .. ஊழல்கள் நடக்கத்தான் செய்யும் என்கிறார் அவர்.

Follow Us:
Download App:
  • android
  • ios