மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலையில் நடைபெறும் மாநாட்டில் ஊழல் தலைவர்கள் சங்கமித்துள்ளனர் என மத்திய அமைச்சரும் பா.ஜ., தலைவருமான பபுல் சுப்ரியோ கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

கொல்கத்தாவில் பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மெகா மாநாடு ஒன்றை தற்போது நடத்தி வருகிறார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. இதற்காக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகளின் தலைவர்கள் கொல்கத்தாவில் கூடியுள்ளனர். 25 கட்சிகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். 


 
இந்த மாநாடு குறித்து மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ தனது டுவிட்டர் பக்கத்தில், ’’இந்த மாநாடு ஊழல் தலைவர்களின் சங்கமம். இந்த போலித்தனத்தை கோல்கட்டா இன்று பார்க்க போகிறது. சுயலாபத்திற்காக அரசியல் கட்சிகள் இணையும் பொருந்தா கூட்டணி இது. திரிணாமுல் காங்., மாநிலத்திற்காக செலவிடாமல், இந்த மாநாட்டிற்காக மிகப் பெரிய அளவிலான தொகையை செலவிட்டுள்ளது. மக்களை போக்குவரத்து நெரிசலில் சிக்க வைத்து, துன்பத்திற்கு ஆளாக்கி உள்ளது திரிணாமுல் காங்கிரஸ்’ என அவர் கடுமையாக சாடியுள்ளார்.