பாஜகவை சேர்ந்த மத்திய வெளியுறவு துறை இணையமைச்சர் முரளிதர ராவ் கொரோனா வைரஸ் காரணமாக தன்னை தானே தனிமை படுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 

சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் 155 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரசால்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை உலகளவில் 7,157 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 1,82,438 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அதில், 79 ஆயிரத்து, 212 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் இதுவரை 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,543-ஆக உள்ளது. இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது வரும் நாட்கள் மற்றும் வாரங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கேரளாவில் முரளிதர ராவ் பார்வையிட்ட மருத்துவமனை ஒன்றில் கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டது. இதனால், முரளிதரராவ் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.