நாடு முழுவதும் கொரோனா பரல்கள் கட்டுக்குள் வந்து இயல்பு நிலை திரும்ப இன்னும் 6 மாத காலம் வரை ஆகலாம் எனக்கூறி மருத்துவர்கள் அதிர்ச்சியை கிளப்பி உள்ளனர். 

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் வீடுகளில் பல கோடி மக்கள் முடங்கி கிடக்கின்றனர். இதனால் இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை அப்போலோ மருத்துவமனை மருத்துவர்  ஒருவர் கூறிய தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

இதுகுறித்து அவர், ’’அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவு. கொரோனா பாதுகாக்க இங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் ஆபத்தான நிலைக்கு செல்வதும் குறைவு. கொரோனாவை எதிர்கொள்ளும் வாழ்க்கை முறைக்கு நாம் பழகிக்கொள்ள வேண்டும். விலகி இருப்பதே தற்போதைய தீர்வு. இதனால் பாதிப்புகள் வேகமாக அதிகரிக்கும். ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கு தற்போது சாத்தியமில்லை. 

ஊரடங்கிற்கு  ஒத்துழைத்து வீட்டில் இருப்பதே தற்போதைக்கு ஒரே வழி.  ஊரடங்கு நடை முறையில் இருந்து விலகி முற்றிலும் இயல்பான நிலைக்கு வருவதற்கு குறைந்தபட்சம் 6 மாதம் வரை ஆகலாம். இனி வாழ்க்கை முறை மாறும். சமூகவிலகல் இன்னும் சில காலம் நிரந்தரமாகும். முகக் கவசம் சாணிடைசர் கொண்டு கை கழுவுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். பொதுப்போக்குவரத்து தொடங்கினாலும் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

திருமணம் நிகழ்ச்சிகள் வழக்கமாக நடப்பது சிரமம். தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சி ஆரம்ப கால கட்டத்தில் இருப்பதால் மருந்து கண்டுபிடிக்க குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை ஆகலாம். கொரோனா எப்போது குறையும்,  அதிகரிக்கும் என்று மருத்துவர்களால் உறுதியாக சொல்ல இயலாத நிலையில் முக கவசம் அணிந்து வீட்டில் தனித்து வெளியில் தனிநபர் இடைவெளியை பின்பற்றினால் மட்டுமே தடுக்க முடியும்’’என்கிறார் அவர்.