மதுரையில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்று ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று வர்தா புயலை விட மோசமாக சுழன்று கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் டெல்லி கோயம்பேடு க்ளஸ்டர் என்று சொல்லி வந்த நாம் இப்ப சென்னைவாசிகளால் கொரோனா தமிழகம் முழுசும் பரவிவிட்டது என்று சொல்லும் அளவிற்கு பரவிக்கொண்டிருக்கிறது.. நாளுக்கு நாள் சாவு எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.மதுரையில் நேற்றுவரைக்கும் அரசு கணக்குப்படி 4பேர் இறந்திருக்கிறார்கள். இந்த தொற்றால் 1477 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு ஜுன்30ம் தேதி வரைக்கும் பொதுமுடக்கம் அறிவித்து அவர்களுக்கு நிவாரணமாக ரேசன் கடைகள் மூலம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி அறிவித்தார். சென்னையில் இருந்து பெரும்பாலானவர்கள் கார், டூவீலர்கள் மூலமாக மதுரைக்கு 20ஆயிரம் பேர் வந்திறங்கியதால் கொரோனா தொற்று மதுரையில் அதிகரிக்கத் தொடங்கியது. எங்கே சென்னையை மிஞ்சி விடுமோ என்கிற பயத்தில் மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, மேற்கு திருப்பரங்குன்றம், பரவை போன்ற பகுதிகள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதன்படி 

மதுரை மாவட்டத்தில் ரூ.1,000 நிவாரணம் வழங்கும் பணி இன்று முதல் தொடங்குகிறது. மதுரையில் 100 மாநகராட்சி பகுதிகள், மதுரை கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம், பேரவை பேரூராட்சியில் நிவாரணம் வழங்கப்படுகிறது.