தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மதுரையில் மையம் கொடூரமாக மையம் கொண்டுள்ளது கொரோனா வைரஸ். இதைக்கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகின்றது. மதுரையில் கொரோனா வைரஸ் ஒருபக்கம் மறு பக்கம் வைரஸ் காய்ச்சல் டெங்குகாய்ச்சல் என மக்களை புரட்டி எடுத்து வருகின்றது.இதையெல்லாம் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை மேலும் நீடித்து உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை அதிகம் தாக்கி வருகின்றது. மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் இன்று 280 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனோ பாதித்தோர் எண்ணிக்கை 3,423ல் இருந்து 3,703 ஆக உயர்ந்துள்ளது.  51 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை 967 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரையில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருவதை கருத்தில் கொண்டு அங்கு முழு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்.... "இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவை 25.3.2020 முதல் அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 31.7.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு 24.6.2020 அன்று அதிகாலை 12 மணி முதல் 5.7.2020 நள்ளிரவு 12.00 மணி வரை அமல்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த முழு ஊரடங்கின்போது கொரோனா நோய்த்தொற்று குறைந்திருப்பினும், கொரோனா நோய்த்தொற்றினை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இந்த முழு ஊரடங்கினை மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் மேலும் 7 நாட்களுக்கு, அதாவது 6.7.2020 அதிகாலை 0.00 மணி முதல் 12.7.2020 நள்ளிரவு 12.00 மணி வரை பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005ன் கீழ் நீட்டிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த முழு ஊரடங்கு உத்தரவு காலத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பணிகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

கட்டுப்பாட்டுப் பகுதிகளில், எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் இது மிகவும் தீவிரமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும். இந்தப் பகுதிகளில் கிருமி நாசினி ஒரு நாளைக்கு இருமுறை தெளிக்கப்படும். அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது, என கூறியுள்ளார்.