Asianet News TamilAsianet News Tamil

கொரோனா கொடுத்த பயங்கர அதிர்ச்சி...!! 10 லட்சம் இந்தியர்கள் உயிரிழக்க வாய்ப்பு..??

இதனால் வெளிநாட்டு விமான சேவைகள் கடுமையான  நஷ்டத்தை சந்தித்து வருகின்றன . இந்நிலையில் கொரோனாவிட்  ஆரம்பப் புள்ளியான சீனாவின் பகுதி மாகாணத்தில் கடந்த ஜனவரி மாதம் வரை கடுமையான கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளன . 

corona virus if very badly affected 10 laksh  Indians may be died
Author
Chennai, First Published Mar 7, 2020, 2:02 PM IST

கரோனா வைரஸ் மிகத்தீவிரமாக இருந்தாலோ அல்லது ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்த வைரஸ் தாக்கம் தொடர்ந்தாலோ இந்தியாவில் மட்டும் 10 லட்சம் பேர் பலியாக வாய்ப்பிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது .  உலகம் முழுக்க 1.5 கோடி பேர் மரணிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .  சீனாவில் தொடங்கிய கொரோனாவை வைரஸ் உலகம் முழுதும் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . 

corona virus if very badly affected 10 laksh  Indians may be died

இந்நிலையில் பல்வேறு நாடுகள் இந்த வைரஸ் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் , இது குறித்து  ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்  தனது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது , அதில்  உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை குறைந்தபட்சம் 1.5 கோடியாக இருக்கலாம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது .  குறிப்பாக இந்த வைரஸ் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் பயணிகள் மூலமாகவே பரவுகிறது . இதனால் வெளிநாட்டு விமான சேவைகள் கடுமையான  நஷ்டத்தை சந்தித்து வருகின்றன . இந்நிலையில் கொரோனாவிட்  ஆரம்பப் புள்ளியான சீனாவின் பகுதி மாகாணத்தில் கடந்த ஜனவரி மாதம் வரை கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன . 

corona virus if very badly affected 10 laksh  Indians may be died

இந்நிலையில் கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக கட்டுப்படுத்த முடியாமல் போனால் ,  அதன் பாதிப்புகள் அமெரிக்கா ,  இங்கிலாந்து , போன்ற வல்லரசு நாடுகளிலும் அதிகமாக இருக்கும்.  கட்டுப்படுத்த முடியாத ஒரு மோசமான சூழலோ அல்லது பாதிப்புகளோ ஏற்பட்டால்  உலக அளவிலான அதிகபட்ச பலி எண்ணிக்கை 6.8 கோடியாக இருக்கும் என்றும் ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது .  அதேபோல அதிகபட்சமாக இந்தியா சீனாவில் தலா 10 லட்சம்  பேரையும் ,  இங்கிலாந்து ஜெர்மனி  பிரான்சில் கூட தலா 50 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios