Asianet News TamilAsianet News Tamil

104 நாடுகளில் கொரோனா வைரஸ்...!! 1 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு..!!

மேலும் 23 பேருக்கு இந்த வைரஸ் அறிகுறி இருப்பதால் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .  இந்தியாவில் நேற்று முன்தினம் வரை வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக இருந்தது ,  அதில் 16 பேர் இத்தாலி நாட்டு சுற்றுலா பயணிகள் ஆவர்கள். 

corona virus attacked for 104 countries til now 1 lakh peoples affected
Author
Delhi, First Published Mar 7, 2020, 1:32 PM IST

உலகம் முழுவதும் சுமார் 104 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது .  கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ,  அமெரிக்கா தென்கொரியா உள்ளிட்ட 104 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது ,   வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது ,  இந்தியாவில் மட்டும்  வைரஸ் அறிகுறி உள்ள 54 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .  இதுவரையில் சீனாவில் மட்டும் 3042 பேர் உயிரிழந்துள்ளனர் ,   80 552 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   இத்தாலியில் 148 பேரும் , ஈரானில் 124 பேரும் வைரஸ் தாக்கியதில் பலியாகியுள்ளனர் .  அமெரிக்காவில் கூட கொரோனா , பரவலைத் தடுக்க முடியவில்லை .

corona virus attacked for 104 countries til now 1 lakh peoples affected

அந்நாட்டில் பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது .  வைரஸ் பாதித்த வர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது .  இதனால் அமெரிக்க மக்களும் பெரும் பீதியில் உள்ளனர் .  இந்நிலையில் சான்பிரான்சிஸ்கோ துறைமுகத்திற்கு வந்துள்ள கிராண்ட் பிரின்சஸ் என்ற கப்பலில் வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன இதனால் அந்தக் கப்பலில் 1800  பேர் அங்கேயே  தங்க வைக்கப்பட்டுள்ளனர் .  அவர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது அதேபோல் செர்பியா ,  வாடிகன் சிட்டி ,  கேமரூன் ,  செனகல் ,  போன்ற நாடுகளுக்கும்  கொரோனா வைரஸ் நேற்று புதிதாக பரவியுள்ளது.  இந்நிலையில் இந்தியாவில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.  

corona virus attacked for 104 countries til now 1 lakh peoples affected

மேலும் 23 பேருக்கு இந்த வைரஸ் அறிகுறி இருப்பதால் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .  இந்தியாவில் நேற்று முன்தினம் வரை வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக இருந்தது ,  அதில் 16 பேர் இத்தாலி நாட்டு சுற்றுலா பயணிகள் ஆவர்கள்.  அனைவருக்கும் டெல்லி ஜெய்ப்பூர் மருத்துவமனையில் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது .  இந்நிலையில் கடந்த நான்கு நாட்களில் வைரஸ் தொற்றின் தீவிரம் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் முன்னெச்சரிக்கையாக சுகாதார பணிகளை மத்திய அரசு முடுக்கி  உள்ளது .  அதேபோல் எல்லா மாநிலங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு நோயின் தீவிரத்தை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் . 
 

Follow Us:
Download App:
  • android
  • ios