பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டராசென்கா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு ஊசி வெற்றியடைந்துள்ளது.கடைசி கட்ட பரிசோதனையில் இருப்பதால் ஒரிரு மாதங்களில் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்த நிறுவனமும் கோடிக்கணக்கில் நோய் தடுப்பு மருந்துகளை தயாரித்து வருகிறன்றது.

கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கும் பணியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் 'ஆஸ்ட்ராசென்கா' நிறுவனம் இணைந்து தடுப்பூசி மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த மருந்து கடந்த ஏப்ரல் முதல் மே வரையிலான காலகட்டத்தில் பிரிட்டனில் உள்ள 1077 பேரின் உடலில் செலுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


அந்நாட்டில் உள்ள ஐந்து மருத்துவமனைகளில் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ள 18 முதல் 55 வயது வரையிலான நபர்களுக்கு மருந்து செலுத்தப்பட்டது.அவர்கள் உடலில் 'ஆன்டிபாடி' எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளதாகவும் இது ஆராய்ச்சியில் புதிய நம்பிக்கையை உருவாக்கி அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி சென்றுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.ஆக்ஸ்போர்டு பல்கலகழகம் உருவாக்கி வரும் தடுப்பு மருந்து பாதுகாப்பனதாகவும் சிறந்த பலனை அளிப்பதாகவும் பிரிட்டனில் தற்போது கொரோனா தொற்று நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருவதால் சோதனை செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கோடிக்கணக்கான மருந்துகள் உற்பத்தி செய்யும் பணியில் ஆஸ்ட்ராசென்கா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் இரண்டாம் கட்ட சோதனை இன்னும் கூடுதலான வெற்றியை கொடுத்தால் முழுவீச்சில் மருந்துகளை தயார் செய்து மற்ற நாடுகளுக்கும் சப்ளை செய்யப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் காத்திருக்கிறார்கள்.
எது எப்படியோ செப்டம்பர் டூ டிசம்பர் மாதத்திற்குள் கொரோனா தடுப்பு ஊசி மருந்து மக்களுக்கு கிடைத்து விடும் என்பதில் சந்தேகமில்லை.