கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு
தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வைரசை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய பின் முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- 

* ஆட்சியர்கள், பிற துறை பணியாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் பாராட்டுகள். 

* தமிழகத்தில் இறப்பு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 

* இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனைகள் தமிழகத்தில் தான் செய்யப்பட்டுள்ளது.

* சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

* கொரோனா தொற்று ஏற்பட்ட ஆட்சியர்கள் குணம் பெற பிரார்த்திக்கிறேன். 

* அத்தியாவசிய பொருட்கள் நியாய விலைக் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. 

* சென்னையில் 25,532 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன 

* சென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் 100 சதவீதம் தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

* அரசு அறிவித்த  வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டுகோள். 

* மக்கள் தரும் ஒத்துழைப்பை பொறுத்தே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும்.

* உரிய பரிசோதனைக்குப் பின் வெளிமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தலாம்.

* தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,67,950ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் அதிகபட்சமாக தமிழகத்தில் தான் நாளொன்றுக்கு 63,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

* மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 

* ஆகஸ்ட் 5ம் தேதி முதல் அனைவருக்கு இலவச முகக்கவசம் வழங்கும் பணி தொடங்கும். 

* 10 ஆண்டுகளுக்கு பிறகு குறித்த நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. 

* காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டதால் கடைமடை வரை  நீர் சென்றுள்ளது. 

*  70 நடமாடும் மருத்துவமனையின் மூலம் பரிசோதனைகள் செய்யப்படுகிறது.