தமிழகத்தில் நான்காம் கட்டமாக மே31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பல மாவட்டங்களுக்கு தளவுர்களையும் அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.சென்னையில் மட்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த படியே இருக்கிறது.அங்கே ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் உக்கரமாகிக் கொண்டிருக்கிறது. இன்று மட்டும் சென்னையில் 482 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகம் முழுவதும் இந்த எண்ணிக்கை 639ஆக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் நேற்று வரை 10538 ஆக இருந்தது. இன்று 11224பேர் என ஏறுமுகாகப் போய்க்கொண்டிருக்கிறது 12 வயதுக்குள்ள குழந்தைகள் 663 பேர் பாதிக்கபட்டிப்பது ரெம்ப அதிகம் என்பதால் அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.தமிழகம் முழுவதும் திருநங்கைகள் 3பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார்கள். மாநிலம் முழுவதும் 634பேர்  குணமடைந்து நல்ல முறையில் வீடு திரும்பியிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.இந்த நிலையில் சென்னையில் மட்டும் இந்த தொற்று பாதிப்பு 1476 ஆக  உயர்ந்துள்ளது.

ஊரடங்கு மே31ம் தேதி வரைக்கும் நீடித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 23மாவட்டங்களில் ஊரடங்கு சில தளர்வுகள் தளர்த்தப்பட்டிருக்கிறது. பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தளங்கள், சுற்றுலா தளங்கள், அருங்காட்சியகம், பூங்கா போன்ற இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வர தடைசெய்யப்பட்டிருக்கிறது.இந்த நிலையில் 12மாவட்டங்களில் ஏற்கனவே இருக்கும் நடைமுறையில்; எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும்,அங்கே தளர்வுகள் ஏதும் இல்லை. தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி(contaiment zone)களில் தற்போது உள்ள நடைமுறைகளின் படி எந்த விதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.