Asianet News TamilAsianet News Tamil

காக்கிச் சட்டைகளை கதறவிடும் கொரோனா.. இதுவரை இத்தனை போலீசார் உயிரிழப்பா..? ஷாக் ரிப்போர்ட்.

இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 1 லட்சத்து ஆயிரத்து 137 காவல்துறையினரும், இரண்டு தடுப்பூசியும் 69 ஆயிரத்து 477 பேர் செலுத்திக் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Corona tearing police department .. Have so many policemen been killed so far ..? Shock report.
Author
Chennai, First Published May 20, 2021, 2:55 PM IST

கொரோனா தொற்றுக்கு தமிழகத்தில் இதுவரை 80 காவல்துறையினர் உயிரிழந்துள்ளதாக தமிழக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தையே உருக்குலைத்து வரும் நிலையில், முன்களப் பணியாளர்களாக பணியாற்றி வரும் காவல்துறையினர் கொரோனா நோய் தொற்றுக்கு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் இதுவரை தமிழகத்தில் 4 ஆயிரத்து 289 காவல்துறையினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 305 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஆயிரத்து 984 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Corona tearing police department .. Have so many policemen been killed so far ..? Shock report.

கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் தாக்கம் துவங்கியது முதல் தற்போது வரை 80 காவல் துறையினர் உயிரிழந்துள்ளதாக தமிழக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினரின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் பொருட்டு தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக காவல்துறையினருக்கு தடுப்பூசி முகாம்கள் அமைத்து அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Corona tearing police department .. Have so many policemen been killed so far ..? Shock report.

அதேபோல 50 வயதுக்கு மேற்பட்ட காவல்துறையினரின் பணிச்சுமையைக் குறைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 1 லட்சத்து ஆயிரத்து 137 காவல்துறையினரும், இரண்டு தடுப்பூசியும் 69 ஆயிரத்து 477 பேர் செலுத்திக் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர் பணியின்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் காவல்துறை சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையில் ஏற்படும் இழப்பும் பாதிப்பும் அவர்களின் குடும்பத்தாரோடு மட்டும் நின்றுவிடாமல் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கே பேரிழப்பை ஏற்படுத்தும் என்பதால் காவல்துறையினரின் பாதுகாப்பை உறுதிபடுத்த கோரிக்கைகள் வலுத்து வருகிறது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios