கொரோனா தடுப்பூசி போடுவது அதிகமாகி வரும் நிலையிலும் தமிழகத்தில் இருந்து கேரளா சென்று விட்டு மீண்டும் கோயம்புத்தூர் திரும்பும் போதும் இ பாஸ் மற்றும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். 

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தி விட்டது. வைரஸ் பரவ தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில், பரவல் சற்று குறைந்து மீண்டும் அசுர வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் ஊரடங்கு போடப்படுமா என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் இப்போது தொற்றைக் குறைக்கும் நடவடிக்கையாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் நுழைபவர்கள் இ பாஸ் கட்டாயம் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கேரளத்தில் கொரோனா பரவல் அதிகரித்தால் வணிகம், வேலை, மருத்துவம் என எந்த தேவைக்கு கோயம்புத்தூர் வந்தாலும் இ பாஸ் மற்றும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார். அதே சமயம், தமிழகத்தில் இருந்து கேரளா சென்று விட்டு மீண்டும் கோயம்புத்தூர் திரும்பும் போதும் இ பாஸ் மற்றும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மேலும், இதை கண்காணிக்க 24 மணி நேரமும் செயல்படும் குழு ஒன்று அமைகபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.