Asianet News Tamil

வெறும் 25 நொடிகளில் கொரோனா ரிசல்ட்.. கொரோனாவுக்கு சமாதிகட்ட புதிய கருவி..

அவசரகாலத்தில் இது போன்ற கருவிகளின் தேவை இன்றியமையாததாக மாறியுள்ளது. தற்போது பிரிட்டிஷ் ஏர்வேஸ் இந்த கருவியை பிரிட்டனிலும், ஐரோப்பாவிலும் பயன்படுத்த ஒப்புதல்  பெறப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.  

Corona result in just 25 seconds .. New tool to bury the corona ..
Author
Chennai, First Published May 15, 2021, 1:47 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் ஆரம்பத்திலேயே வைரஸ் தொற்றை கண்டறிந்து அதை தடுக்க முடியும் என ஐ.சி.எம்.ஆர் மற்றும் WHO உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அப்படி கொரோனா பரிசோதனை செய்யப்படும் பட்சத்தில் அதற்கான முடிவுகள் தெரிய குறைந்தது இரண்டு அல்லது 3 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதற்குள் வைரஸ் பாதித்தவர்கள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உயிரிழக்கும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். எனவே சோதனைக்கும்- முடிவுக்கும் இடைப்பட்ட அந்த காலத்தை சமாளிப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது.

இந்நிலையில், நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக வெரும், 25 நிமிடங்களில் கொரோனா தொற்று உள்ளதா.? இல்லையா என்ற ரிசல்ட் தெரிந்து கொள்ளும் புதிய வகை மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அந்த கருவியை எப்படி பயன்படுத்துவது அதன் அவசியம் குறித்த தகவல்கள் பின்வருமாறு:  

தற்போது கொரோனாவை கண்டறிவதற்கு மூன்று வகையான பரிசோதனைகள் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆர்டிபிசிஆர் பரிசோதனை, ஆன்டிஜென் பரிசோதனை, ஆன்டிபாடி டெஸ்ட் என மூன்று வகையான பரிசோதனைகள் உள்ளது. இதில் பெரும்பாலும் ஆர்டிபிசிஆர் எனப்படும் SWAB டெஸ்ட் தான் பெரும்பாலானோரால் பின்பற்றப்படுகிறது. இந்த பரிசோதனையை என்பது மூக்கு அல்லது தொண்டை வழியாக நாசி துவாரத்தில் உள்ள சளி அல்லது உமிழ்நீர் எடுத்து  பரிசோதிக்கும் முறையாகும். ஆனால் இந்த பரிசோதனையின் முடிவுகள் கிடைப்பதற்கு குறைந்தது இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டும்.

இதுவே, கிராமப்புறங்களில் இருப்பவர்கள் குறைந்தது ஐந்து நாட்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதேநேரத்தில் தனியார் நிறுவனங்களில் எடுக்கப்படும் பரிசோதனைக்கு கொரோனா உள்ளதா இல்லையா என்பதற்கான சான்றிதழ் வழங்கப்படும். இதே அரசு மருத்துவமனைகளில் எடுக்கப்படும் சோதனைகளுக்கு சான்றுகள் பெறுவதில் சிக்கல் உள்ளது.  இதற்கு மத்தியில் ஒருவர் தனக்கான பரிசோதனை முடிவுகளை அறிந்துகொள்ள இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழலில் அவர் சந்திக்கும் மனப்போராட்டத்திற்கு அளவே இல்லை எனலாம். எனவே இது போன்ற தவிப்புகள், காத்திருப்புகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில்,  அதிவிரைவு ரேப்பிட் சோதனை கிட் அறிமுகப்படுத்தப்பட்டது, ரத்த மாதிரியின் மூலம் பரிசோதிக்கும் முறை ஆகும், ஆனால் பெரும்பாலும் அதன் முடிவுகள் துள்ளியமாக இல்லை என பரவலாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அதை பயன்படுத்துவதில் மக்களுக்கு ஆர்வம் குறைந்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கருவிகளும் திருப்பி அனுப்ப ப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுமார் 98 சதவீதம் கொரோனா ரிசல்டை துல்லியமாக வழங்கும் எலக்ட்ரானிக்கல் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. '' அல்ட்ரா ரேப்பிட் ஆன்டிஜன் மொபைல் டெஸ்ட் கிட் ''  என்பது அதன் பெயர் ஆகும். 

இது மற்ற கருவிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கும் மற்ற கருவிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் ஒரு சர்க்கரை நோயாளி எப்படி அவருக்கு கொடுக்கப்பட்ட கிட்டில் ரத்தம் துளிகள் மூலம் சுகர் டெஸ்ட் செய்கிறாரோ, அதுபோலத்தான் கொடுக்கப்பட்டுள்ள இந்த  ' அல்ட்ரா ரேப்பிட் ஆன்டிஜன் மொபைல் டெஸ்ட் கிட்டில்  உமிழ்நீர் மூலம் சோதனை செய்யப்பட வேண்டும். அப்போது அந்த பரிசோதனை கருவி அதற்காக கொடுக்கப்பட்டுள்ள செல்போன் ஆப்பில்  இணைக்கப்பட்டிருக்க வேண்டும், அப்போது அதற்கான ரிசல்ட் குறைந்தது வெறும் 25 வினாடிகள் முதல் 25 நிமிடங்களில் தெரிந்துவிடும். இந்த டிவைஸ் குறைந்தது 25 வினாடிகளிலேயே அதற்கான ரிசல்டை கொடுத்து விடுகிறது என்கின்றனர். 

செல்போனில் இணைக்கப்பட்ட ஆப் மூலம் பரிசோதனை செய்யப்பட்டவருக்கு கொரோனா பாசிட்டிவ்வா அல்லது நெகட்டிவ்வா என்ற முடிவுகள் அதில் காட்டிவிடும்,  கொரோனா பாசிட்டிவ் என்றால், சிவப்பு நிற சிக்னலும், கொரோனா நெகட்டிவ் என்றால் பச்சை நிற குறியீடும் திரையில் ஒளிரும் என்கின்றனர். அதி விரைவாக சிகிச்சை மேற்கொள்ள,  அல்லது ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு விமான பயணம் மேற்கொள்பவர்கள், அந்நாட்டி விமான நிலையங்களில் தனக்கு நோய் தொற்று இருக்கிறதா.? இல்லையா என்பதற்கான சான்றளிக்க வேண்டியுள்ளது. அது போன்ற நேரங்களில் இந்த கருவிகள் மூலம் பரிசோதனை செய்து அதை சான்றாக காட்டலாம் என்கின்றனர். 

அவசரகாலத்தில் இது போன்ற கருவிகளின் தேவை இன்றியமையாததாக மாறியுள்ளது. தற்போது பிரிட்டிஷ் ஏர்வேஸ் இந்த கருவியை பிரிட்டனிலும், ஐரோப்பாவிலும் பயன்படுத்த ஒப்புதல்  பெறப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. பல நாடுகளும் இந்த கருவியை பயன்படுத்துவதற்காக ஒப்புதல் பெற விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பல நாடுகளின் விமான நிறுவனங்களும் இந்த கருவியை பயன்படுத்த ஒப்புதல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.  ஏனெனில் பல நாடுகள் விமான பயணிக்கு கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொண்ட பின்னரே தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கின்றன. அதுபோன்ற நேரங்களில் இந்த கருவிகளின் மூலம் எளிதாக விமான பயணிகளுக்கு கொரோனா தொற்று உள்ளதா இல்லையா என்பதை எளிதாக கண்டறியும் வகையில் இந்த கருவிமை பயன்படுத்த விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. 

பொது இடங்களுக்கோ அல்லது பெரிய வணிக வளாகங்களுக்கோ, நாம் போகும்போது, வெப்பமானி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது, ஆனால் பல பேருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லாமலேயே, காய்ச்சல் இல்லாமலேயே தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். அதுபோன்ற நேரங்களில் வெப்பமானிகள் பெரிய அளவில் கைகொடுப்பது இல்லை, எனவே இதுபோன்ற சோதனை கருவிகள் மூலம் குறைந்த நேரத்தில் கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்ய முடியும் என்பது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.  இன்னும் சில வாரங்களில் பல சர்வதேச நாடுகளில் இது பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த கருவி இந்தியாவுக்கு வர இன்னும் நான்கு மாதங்கள் ஆகக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios