ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரனின் மனைவி, மகனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சமாக உயர்வு. இந்தியாவில் 17,848 பேர் பலியாகிவிட்டனர். தமிழகத்தில் இன்று 2852 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் தமிழகத்தில் மொத்தமாக 52926 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 39856 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். தமிழகத்தில் இன்று 63 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 1264 பேர் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது மகன் மற்றும் உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகர் தொடர்ந்து மக்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.