Asianet News TamilAsianet News Tamil

தலைமைச் செயலகத்தில் கொரோனா பாதிப்பு எதிரொலி..!! முதன்மை செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு...!!

தலைமை செயலகத்தின் அனைத்து  பிரிவுகளும் ஆக்ஸிஜன் அளவை சரிபார்க்க தேவையான ஆக்சிமீட்டர்கள் மற்றும் தினசரி அடிப்படையில் தங்கள் துறைகளின் பணியாளர்களின் வெப்பநிலையை சரிபார்க்க வெப்ப ஸ்கேனர்களை வாங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

Corona impact echoes in General Secretariat,  The order issued by the Chief Secretary
Author
Chennai, First Published Oct 16, 2020, 11:56 AM IST

தலைமைச் செயலகத்தில் கொரனா பாதிப்பு எதிரொலியாக அனைத்து அரசு துறைகளும் மருத்துவ உபகரணங்களை வாங்கி பரிசோதனை செய்து அறிக்கை அனுப்ப பொது துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் 6500 பணியாளர்களில் இதுவரை 256 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் பொதுத்துறை முதன்மை செயலாளர், கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் (COVID-19) குறித்து அனைத்து செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.இந்த கடிதத்தில் தலைமைச் செயலகத்தில் கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக  பொதுத் துறையால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, 

Corona impact echoes in General Secretariat,  The order issued by the Chief Secretary

மேலும் அனைத்து ஊழியர்களும் செயலக பார்வையாளர்களும் வெப்ப ஸ்கேனிங்கிற்கு உட்படுத்தப்பட்டு, கிருமி நாசினி கொண்டு கைக்களை சுத்தம் செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார். தலைமைசெயலகத்தில் உள்ள முக்கிய கட்டிடம், நாமக்கல் கவிஞர்மாளிகை நுழைவாயில்களில் சுத்திகரிப்பு மருந்துகள் மேலும், கிருமி நாசினி சுத்திகரிப்பு, மருந்தகங்கள், செயலக மருந்தகம், ஏடிஎம் போன்றவற்றை இணைக்கும் அனைத்து பொதுவான இடங்களிலும் வழங்கப்படுகின்றன. தற்போது, ​​தலைமைச்செயலகத்தில் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு வந்துள்ளது. 

Corona impact echoes in General Secretariat,  The order issued by the Chief Secretary

எனவே, செயலகத்தின் அனைத்து  பிரிவுகளும் ஆக்ஸிஜன் அளவை சரிபார்க்க தேவையான ஆக்சிமீட்டர்கள் மற்றும் தினசரி அடிப்படையில் தங்கள் துறைகளின் பணியாளர்களின் வெப்பநிலையை சரிபார்க்க வெப்ப ஸ்கேனர்களை வாங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன. மேலும், காய்ச்சல், அதிக வெப்பநிலை, சளி, இருமல் அல்லது ஆக்ஸிஜன் செறிவு குறைதல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட எந்தவொரு அதிகாரியும், ஊழியர்களையும்  மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று  அணைத்து துறையின் செயலாளர் அதை தினசரி அடிப்படையில் கண்காணிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios