திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சகோதரியும் மகளிரணி செயலாளரும், எம்.பியுமான கனிமொழிக்கு கொரோரா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அவரது சகோதரரும், நடிகர் அருள் நிதியின் தந்தையுமான மு.க.தமிழரசுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோன பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா இரண்டாம் அலை பரவ தொடங்கிய நிலையில் அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்கும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 3,672 பேருக்கு கொரோனா உறுதியாகியது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த ண்ணிக்கை 9,03,479 ஆக உயர்ந்தது. அத்துடன் கொரோனா பாதிப்பால் நேற்று 11 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,789 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க.தமிழரசுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பை தொடர்ந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் மு.க.தமிழரசு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே திமுக எம்.பியும் ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழி தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. தற்போது தனியார் மருத்துவமனையில் கனிமொழி சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவ உதவிகள் அனைத்தும் கிடைப்பதாகவும், தான் மீண்டும் தேறிவர வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி என்றும் கூறினார்.