கொரோனா சிறப்பு நிதியாக தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ6600கோடி நிதி வழங்கியதாக மத்திய நிதியமைச்சர் சொல்லுகிறார். ஆனால் தமிழக அரசு சுகாதாரத்துறை அதிகாரிகளோ 1500 கோடி என்கிறார்கள் இதில் யார் சொல்லுவதை நம்புவது என்று தெரியவில்லை குழப்பமாக இருப்பதாகவும் உண்மை நிலவத்தை முதல்வர் மறைக்காமல் வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருப்பது தமிழக அரசிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனாவால் சிதைந்த போன இந்திய பொருளாதாரத்தை மீட்க மத்திய 20லட்சம் கோடிக்கு பொருளாதார திட்டங்களை அறிவித்தது. அதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் கொரோனாவில் இருந்து மக்களை காக்க மருத்துவ உபகரணம் கொள்முதல்
கொரோனா சிறப்பு நிதியாக தமிழகத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ6600 கோடி நிதியை தமிழகத்திற்கு வழங்கியிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்திருக்கிறார். ஆனால் ஜீன் 17ம் தேதி அன்று உபகரணங்கள் கொள்முதல் செய்ய 3ஆயிரம் கோடி தேவையென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். தமிழக நிதித்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்திய அரசு வழங்கியுள்ள நிதி 1500கோடி ரூபாய் தான் இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.இதில் யார் சொல்லுவது சரி? அதிகாரிகள் கருத்து சரியென்றால் முதலமைச்சர் மவுனம் காப்பது ஏன்?

மருத்துவ உபகரணங்கள் வாங்க மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி எவ்வளவு? நிதியமைச்சர் அறிவித்த 6600கோடி ரூபாய் கிடைத்ததா இல்லையா? அந்தத் தொகைக்கு கொள்முதல் செய்துள்ள மருத்துவ உபகரணங்கள் என்னென்ன என்பதை தெளிவான அறிக்கையாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரகாட்டக்காரன் சினிமா படத்தில் வரும் கவுண்டமணி செந்தில் சொல்லும் வாழைப்பழம் கதை மாதிரியாக இருக்கிறது மத்திய அரசும் மாநில அரசும் சொல்லும் நிதி கணக்கு.