கொரோனா தொற்று பேரழிவு தரும் செய்திகளால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளார். 

மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன்  34 வயதான ஆஷிஷ் யெச்சூரி நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியை அடுத்த குருகிராமில் ஆஷிஷ் யெச்சூரி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆஷிஷ் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

’’எனது மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரியை இன்று காலை COVID-19 க்கு இழந்தேன் என்பதை நான் மிகுந்த சோகத்துடன் தெரிவிக்க வேண்டும். எங்களுக்கு நம்பிக்கை அளித்த மற்றும் அவருக்கு சிகிச்சையளித்த அனைவருக்கும் – மருத்துவர்கள், செவிலியர்கள், முன்னணி சுகாதார ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் எங்களுடன் நின்ற எண்ணற்ற மற்றவர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்’’என்று தெரிவித்திருக்கிறார் யெச்சூரி.

ஆஷிஷ் யெச்சூரியின் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘’பேரழிவு தரும் செய்திகளால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஒரு பெற்றோராக இழப்பு மற்றும் வருத்தத்தைத் தாங்க உங்களுக்கு வலிமை கிடைக்கட்டும். தமிழ்நாட்டு மக்கள் உங்களுடன் வருத்தப்படுகிறார்கள். குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் பிரார்த்தனையும்’’என்று தெரிவித்து இருக்கிறார்.