கொரோனா வைரஸ் என்பதை தீவிரமாக பரவி வருகிறது, 3வது அலையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் கடந்து வந்தோம். இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் முழுவதும் நான்காவது அலை போன்ற பாதிப்புகளும் அதிகரித்து வருகிறது .
மூன்றாவது அறையை பாதிப்பில்லாமல் கடந்து வந்தோம், ஆனால் நான்காவது அலை உலகம் முழுவதும் தினமும் அதிகரித்து வருகிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கவலை தெரிவித்துள்ளார். இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. இதுவரை 150-க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கானோர் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர், கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரையில் மூன்று அலைகள் ஏற்பட்டுள்ளது, 4வது அலை ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் உச்சத்தை எட்டும் என அஞ்சப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வைரஸ் செங்குத்தாக வீழ்ச்சி அடைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அனைவரும் பொது இடத்தில் முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை சர் பிட்டி தியாகராயர் 170 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மாநகராட்சி அலுவலக வலாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சாமிநாதன் சென்னை மாநகராட்சி மேயர் துணை மேயர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்ரமணியன் தமிழக அரசு சார்பில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் நீதிக் கட்சியை தோற்றுவித்தவரான சர் பிடி தியாகராயருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவருடைய திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது என்றார். தஞ்சாவூரில் இன்று அதிகாலை தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக முதல்வர் அங்குள்ள அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களையும் முதல்வர் நேரில் சென்று பார்க்க உள்ளார். மொத்தம் 28 நபர்கள் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் தாக்கியதில் 11 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 17 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அதில் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர் என்றார். சிகிச்சை பெற்று வருபவர்களை கண்காணிக்க கல்லூரி முதல்வர் தலைமையில் மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார். இதுபோல் கொரோனா வைரஸ் என்பதை தீவிரமாக பரவி வருகிறது, 3வது அலையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் கடந்து வந்தோம். இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் முழுவதும் நான்காவது அலை போன்ற பாதிப்புகளும் அதிகரித்து வருகிறது . அதன் அடிப்படையில் தொடர்ந்து வரும் 8-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 2 கோடி பேர் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர். அவர்கள் தங்கும் இடத்திலேயே முகாம்கள் அமைத்து தடுப்பு செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
